பக்கம் எண் :

292தொல்காப்பியம்-உரைவளம்

உணர்ச்சி ஏழாவது-நாற்ற முதலாகச் சொல்லப்பட்டவற்றால் வரும் மனநிகழ்ச்சி ஏழும்.

பல்வேறு கவர் பொருள் நாட்டம் என்பது-ஒன்றோடொன்று ஒவ்வாத வேறுபட்டனவாகி இருபொருள் பயக்கும் சொற்களாலே யாராய்தல்.

அவற்றுள் சில வருமாறு:-

“கண்ணுஞ் சேயரி பரந்தன்று நுதலும்
நுண்வியர் பொறித்து வண்டார்க் கும்மே
வாங்கமை மென்றோள் மடந்தை
யாங்கா யினள்கொல் என்னும்என் நெஞ்சே” 1      (சிற்றெட்டகம்)

இது தலைவி தோற்றங் கண்டு பாங்கி கூறியது. பிறவும் அன்ன.

குறையுறற் கெதிரிய கிழவனை மறையுற என்பது-கள வொழுக்கத்தின் கண்ணே யுறுதற்காகத் தனது குறையைச் சொல்ல வேண்டி எதிர்ப்பட்ட தலைவனை யென்றவாறு.

மறையுற என்பதனை முன்னே கூட்டுக.

பெருமையிற் பெயர்ப்பினும் என்பது-தலைவனது பெருமையான் நீக்கலும் என்றவாறு.

“இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீனெறி பரதவர் மகளே நீயே
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வர் காதல் மகனே
நிணச்சுறா உறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ
புலவு நாறுதும் செலநின் றீமோ
பெருநீர் விளையுள்எம் சிறுநல் வாழ்க்கை


1. கருத்து: தலைவிக்குக் கண்களும் செவ்வரி பரந்தன. நுதலானது வியர்த்து வண்டு மொய்க்கும் படியாயிற்று. வளைந்த மூங்கில் போலும் தோளுடைய மடந்தையானவள் என் ஆயினள் என வருந்தும் என் நெஞ்சம்.