பக்கம் எண் :

களவியல் சூ. 24293

நும்மொடு புரைவதோ அன்றே
எம்ம னோரிற் செம்மலும் உடைத்தே” 1      (நற்றிணை-45)

எனவரும்.

உலகுரைத் தொழித்தல் என்பது-உலகத்தார் மகட்கொள்ளுமாறு கொள்ளெனக் கூறுதல்.

“கோடீர் எல்வளைக் கொழுமடற் கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின்
தெண்கழிச் சேயிறாற் படூஉந்
தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ” 2      (ஐங்குறு-199)

இன்னும் உலகுரைத் தொழித்தல் என்றதனாற் கையுறை மறையுங் கொள்க.

“நீடுநீர்க் கானல் நெருநலும் நித்திலங் கொண்டைய வந்தீர்
கோடுயர் வெண்மணற் கொற்கையெம் ஊரிவற்றாற் குறையிலேமியாம்
ஆடுங் கழங்கும் அணிவிளக்கும் அம்மனையும்
பாடியவைப்பனவும் பந்தாடப் படுவனவும் பனிநீர்      முத்தம்”3


1. கருத்து: தலைவ! இவள் கடலில் மீன் பிடிக்கும் பரதவர் மகள்; நீ கொடியாடும் கடைத் தெருக்களையுடைய ஊரில் விரைந்தோடும் தேருடைய செல்வர் மகன். சுறா மீனைக் காயவைத்தல் வேண்டி அதைக் கவர வரும் காக்கையை ஓட்டும் இழிந்த எமக்கு உன் நலன் எப்படிப் பொருந்தும். யாங்கள் புலால் நாற்றம் நாறுவேம்; அது பொறாத உயர்ந்த நீ எட்டி நிற்பாயாக. அதனால் எம் வாழ்க்கை உன்னொடு பொருந்தி வராது. எங்கள் குலத்திலும் நின் போன்ற செல்வரை எம் மரபு உடையதாகும்.

2. கருத்து: அழகிய கழியில் சிவந்த இறால் மீன் படுகின்ற தண்கடற் சேர்ப்பனே! வளையலையும் கூந்தலையும் தொடியையும் உடைய மடவரலை நீ விரும்பிக்கொள்ள நினைவாயாயின் உலக வழக்கப்படி மணம் பேசி வந்து மணந்து கொள்வாயாக.

3. கருத்து: ஐய! முத்தைக் கையுறையாகக் கொண்டு தினமும் வந்தீர். எம் கொற்கையூர் முத்துகளாற் குறை