அருமையின் அகற்சியும் என்பது-தலைவியைக் கிட்டுதற்கு அருமை கூறி யகற்றுதல். (உ-ம்) “நெருநலும் முன்னா ளெல்லையும் ஒருசிறைப் புதுவை யாகலின் அதற்கெய்த நாணி நேரிறை வளைத்தோள்நின் தோழி செய்த ஆருயிர் வருத்தங் களையா யோவென எற்குறை யுறுதி ராயிற் சொற்குறை எம்பதத் தெளியள் அல்லள் எமக்கோர் கட்காண் கடவுள் அல்லளோ பெரும வால்கோன் மிளகின் மலயங் கொழுங்கொடி துஞ்சுபுலி வரிப்புறந் தைவரும் மஞ்சுசூழ் மணிவரை மன்னவன் மகளே”1 எனவரும். அவளறிவுறுத்துப் பின்வாவென்றலும் என்பது-நின்னாற் காதலிக்கப்பட்டாட்குச் சென்று அறிவித்துப் பின்னர் என் மாட்டுவா என்றவாறு. அவற்றுள் நீயே சென்று அறிவி என்றதற்குச் செய்யுள்:- “தன்னையுந் தான்நாணுஞ் சாயலாட் கீதுரைப்பின் என்னையும் நாணப்படுங் கண்டாய்-என்னைய வேயேர்மென் தோளிக்கு வேறாய் இனியொருநாள் நீயே யுரைத்து விடு”2
யில்லாதது. கழங்கு, விளக்கு, அம்மனைக்காய், பாட வைப்பன, பந்தாடப்படுவன எல்லாமே முத்துகள்தாம். அதனால் நீ கொண்டுவந்ததை நீயே கொண்டு செல்க. 1. கருத்து: தலைவ! நேற்றும் அதற்கு முன் தினமும் நீ புதியவன் ஆதலின் புணர்ச்சிக்குக் கூற நாணி என்னைப் பார்த்து, நின் தோழி செய்த வருத்தத்தைப் போக்காயோ என்று குறையிரந்தாய். என் தோழியானவள் யான் குறையிரந்து சொல்லும் அளவுக்கு எமக்கு எளியவள் அல்லள். யாம் வணங்கும் கடவுள் அவள். அன்றியும் அவள் மன்னவன் மகள். 2. கருத்து: தன் ஒழுக்கம் நினைந்து தன்னையே தான் நாணப்படுவாள். நின் குறையினைச் சொன்னால் |