பக்கம் எண் :

களவியல் சூ. 24295

பின்வா வென்றற்குச் செய்யுள்:-

“நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட
கோள்வேங்கை போற்கொடியர் என்னையன்மார்- கோள்வேங்கை
அன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக்கு
என்னையோ நாளை எளிது”1      (திணைமாலை-2)

எனவரும்.

பேதைமை யூட்டல் என்பது-நேரினும் அவள் அறிவாளொருத்தி யல்லள் என்று தலைவற்குக் கூறல்.

(உ-ம்)

“நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை
வெறும்புதல்போல் வேண்டாது வேண்டி-எறிந்துழுது
செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு
நொந்தினைய வல்லளோ நோக்கு”2      (திணைமாலை-24)

இன்னும், பேதைமையூட்டல் என்பதனால் தோழிதான் அறியாள் போலக் கூறுதலுங் கொள்க.


என்னையும் காணநாணப் படுவாள். அதனால் வேறொரு நாளில் நீயே அவளிடம் நின் குறையை உரைத்துவிடு,

1. கருத்து: வேங்கை மரம் புதிதாகப் பொன்போற் பூக்கும் மலை நாடனே! கொலைவல்ல புலிபோற் கொடியர் என் தமையன்மார். நீயும் அவ்வேங்கைபோல் வாய். அதனால் இருவரிடையே போர் எழும். நீ தரும் அரிய தழையுடையை யாம் ஏற்காமைக்கு அதுவே காரணம். எனவே நீ நாளைவரின் கூட்டம் எளிதாகும். என்ன கூறுகிறாய்.

2. கருத்து: தலைவ! தகரம் வகுளம் ஆகியவற்றை வெறும் புதர்களாகக் கருதியதுபோல் விரும்பாது வெட்டியெறிந்து செந்தினையை விரும்பி விதைப்பாராகிய குறவர்க்குத் தங்கையாகிய தலைவி பிறர் கொண்ட நோய்க்கு வருந்தும் ஆற்றலுடையளோ; அல்லள்.