பக்கம் எண் :

32தொல்காப்பியம்-உரைவளம்

ஐயம்

91. சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப
 இழிந்துழி இழிபே சுட்ட லான.      (3)

ஆ. மொ.

இல.

They say that it they excel in their individual talents it is better to doubt one another, for there is no necessity for such doubt is either of them be inferior which signifies contempt.

பி. இ. நூ.

நம்பி. 120.

மடமான் நோக்கி வடிவம் கண்ட
இடமும் சிறந்துழி எய்துவது ஐயம்

மாறன். 8.

எய்திய இருவருள் சிறந்த இறைவன்மேற்று
அய்யுறல் என்ப அறிவுடையோரே

இல.வி. 489.

மடமான் நோக்கி வடிவும் கண்ட
இடமும் சிறந்துழி எய்துவது ஐயம்.

இளம்.

என்-எனின், ஐயம் நிகழும் இடம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : ஒருவன் ஒருத்தியைக் கண்ணுற்றுழி அவ்விருவகையும் உயர்வுடையராயின் அவ்விடத்து ஐயம் சிறந்தது என்று சொல்லுவர், அவர் இழிபுடையராயின் அவ்விடத்து அவள் இழிபினையே சுட்டி யுணர்தலான் என்றவாறு. சிறப்பு என்பது மிகுதி. ஐயமிகுதலாவது மக்களுள்ளாள் அல்லள் தெய்வமோ என மேலாயினரோடே ஐயுறுதல். சிறந்துழி என்பதற்குத் தலைமகள் தான் சிறந்துழியும் கொள்ளப்படும். அவனைக் கண்ட இடம் ஐயப்படுதற்குச் சிறந்துழியும் கொள்ளப்படும். உருவ மிகுதியுடையளாதலின் ஆயத்தாரிடைக் காணினும் தெய்வம் என்று ஐயுறுதல். இதனாற் சொல்லியது உலகத்துத்