கூட்டத்துக்கு இடையூறாகும். அதனால் “சிறந்துழி ஐயம் சிறந்தது’ என்பதற்கு “இனி நிகழவிருக்கும் காமக் கூட்டம் பொலிவு பெறுவதற்கு ஏற்ப ஒருவரையொருவர் உயர்ந்தாராக மதிக்கும் உணர்வு சிறந்தவிடத்து ஐயம் சிறந்ததாகும்; அவ்வாறின்றிக் காமக் கூட்டத்துக்கு இழிவு தோன்றுமாறு உணர்வு குறைபட்ட விடத்து அக்கூட்டத்துக்குக் குறைவையே சுட்டும் ஆதலினால்” எனப் பொருள் கொள்வது சாலப் பொருந்தும்” (இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் பத்தொன்பதாவது கருத்தரங்கு ஆய்வுக் கோவை, தொகுதி 2. பக். 105. அண்ணாமலை நகர் 1987) சிவ. (இ.ள்): பின்னர் நிகழும் இயற்கைப் புணர்ச்சிக்குக் காரணமாகச் சிறக்குமிடத்துத் தலைவன் தலைவியைப் பற்றி தெய்வமகளோ முதலியவாக ஐயப்படுதல் சிறப்புடையதாகும் என்பர்; அவ்வாறின்றி இயற்கைப் புணர்ச்சிக்குக் குறைபாடுடையதாகத் தோன்றுமாயின் அவ் வையம் அப்புணர்ச்சிக்கு இடையூறே தருதலின் சிறவாது என்பர். “ஐயக் கிளவி ஆடூடவிற்குரித்தே” எனப் பின்னர்க் கூறுதலின் ஐயம் தலைவனுக்கே யுரியதென்க. பிற்காலத்துச் சேக்கிழார் பரவையார் சுந்தரரை “முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ, தன்னேரில் மாரனோ” (பெரிய, தடுத்.) என ஐயப்பட்டதாகக் கூறியது அகப்புறக் கைக்கிளையின் பாற்சாரும். சிறந்துழி என்பதற்கு இளம்பூரணர், தலைவன் தலைவியர் எனச் சிறந்த இடம் என இருவரையும் தழுவிப் பின்னர் ஐயக் கிளவி ஆடூடவிற் குரித்தே என்பதனால் தலைவியை விலக்கினார். நச்சினார்க்கினியர் சிறந்துழி என்பதற்குத் தலைவனிடம் என்றும் இழிந்துழி என்பதற்குத் தலைவியிடம் என்றும் கொண்டார். வெள்ளைவாரணனார் சிறந்துழி என்பதற்குத் தலைவி எனக் கொண்டு “தலைவி ஒத்த நலங்களாற் சிறந்து தோன்றிய வழி” எனப் பொருள் உரைத்தார். ஐயம் இழிந்துழி இழிபே சுட்டலான ஐயம் சிந்துழிச் சிறந்த தென்ப எனக் கூட்டுக. சிறந்துழி என்பதற்கு “காமக் கூட்டம் பொலிவு பெறுதற்கு ஏற்ப ஒருவரை யொருவர் உயர்ந்தாராக மதிக்கும் உணர்வு |