பக்கம் எண் :

36தொல்காப்பியம்-உரைவளம்

சிறந்தவிடத்து எனப் பொருள் கொண்ட சச்சிதானந்தம் உரை சிறப்புடையதே. எனினும் ‘உணர்வு சிறந்த விடத்து’ எனச் சிறப்பை உணர்வின் மேல் ஏற்றுவதைவிட, ஐயத்தின் மேல் ஏற்றி, “ஐயமானது காமப் புணர்ச்சிக்குச் சிறப்பைத் தருமாறு சிறந்ததாயின் அவ்வையமே சிறந்ததாம் எனக் கூறுவது இன்னும் சிறக்கும்.

ஐயத் தெளிவுக் காரணம்

92. வண்டே இழையே வள்ளி பூவே
கண்ணே அலமரல் இமையே அச்சம் என்று
அன்னவை பிறவும் ஆங்கவை நிகழ
நின்றவை களையும் கருவி என்ப      (4)

ஆ. மொ.

இல.

Beetle Ornament, Creeper, Flower, Eye, Confusion, Twinkling of the eye and fear. And such others which happen to be there are the means of clearing the doubt they say*

பி. இ. நூ.

நம்பி. 121.

எழுதிய வல்லியும் தொழில்புனை களனும்
வாடிய மலரும் கூடிய வண்டும்
நடைபயில் அடிவும் புடைபெயர் கண்ணும்
அச்சமும் பிறவும் அவள்பால் நிகழும்
கச்சமில் ஐயம் கடிவன வாகும்.

மாறன். 9.

அலம்வரல் கண்ணிமைப்பு அச்சம் உகக்கும்
மன்னுயிர்ப் பதனின் வாடுதல் வெயர்த்தல்
ஒளிர்கலன் வள்ளி வண்டுடன் நிழலிடுதல்
அடிநிலன் தோய்தல் அவண் நிகழ் ஐயம்
கடிவன வாகும் காவலன் தனக்கே.


* This is proved to be interpolated.