இல வி. 490 நம்பி அகப்பொருள் சூத்திரம் முழுவதும். இளம். என்-எனின், ஐயப்பட்டான் துணிதற்குக் கருவி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : எண்ணப்பட்ட வண்டு முதலாகிய எட்டும் பிறவுமாகி அவ்விடத்து நிகழாநின்ற ஐயம் களையும் கருவி என்றவாறு. ஐயமென்பது அதிகாரத்தான் வந்தது. “நிகழா நின்றவை;’ என்பது குறுகி நின்றது1, வண்டாவது, மயிரின் அணிந்த பூவைச் சூழும் வண்டு, அது பயின்றதன் மேலல்லது செல்லாமையின் அதுவும் மக்களுள் ளாளென்றறிதற்குக் கருவியாயிற்று இழையென்பது அணிகலன். அது செய்யப்பட்டது எனத் தோற்றுதலானும் தெய்வப்பூண் செய்யா அணியாதலானும் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. வள்ளி என்பது முலையினும் தோளினும் எழுதிய கொடி. அதுவும் உலகின் உள்ளதாகித் தோன்றுதலின் (அதுவும்) கருவியாயிற்று, அலமரல் என்பது தடுமாறுதல் தெய்வமாயின் நின்றவழி நிற்கும். அவ்வாறன்றி நின்றுழி நிற்கின்றிலள் என்று சுழற்சியும்2 அறிதற்குக் கருவியாயிற்று. இமைப்பென்பது கண்ணிமைத்தல். தெய்வத்திற்குக் கண் இமையாமையின் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. அச்சமென்பது ஆண்மக்களைக் கண்டு அஞ்சுதல். அது தெய்வத்திற்கு இன்மையான் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. அன்னவை பிறவும் என்றதனான் கால் நிலந்தோய்தல், வியர்த்தல், நிழலாடுதல் கொள்க. இவை கருவியாகத் துணியப்படும் என்றவாறு* காட்சி முதலாகிய இத்துணையும் கைக்கிளைக் குறிப்பாம்3. இதற்குச் செய்யுள் வந்தவழி காண்க. இனிக்4
1. நிகழா நின்றவை என்பது நிகழ நின்றவை எனக் குறுகி நின்றது. காட்சிக் காலத்து நிகழ்கின்ற வண்டு மொய்த்தல் முதலியவை ஐயம் களையும் என்றவாறு. 2. சுழற்சி-கண்ணின் சுழற்சி * ஐயத்தை நீக்கும் இவையே கருவியாகத் துணியப்படும் என்பது கருத்து. 3. கைக்கிளை என்பது இருவருள் ஒருவர் பாலுண்டாம் கேண்மை. இயற்கைப் புணர்ச்சியில் காட்சி முதல் ஐயம் வரையுள்ள இவை தலைவியின் உள்ளக் குறிப்பை அறிதற்கு முன்னர் நிகழ்வன ஆதலின் ‘ஒரு மருங்கு பற்றியகேண்மையாகும். அதனால் கைக்கிளைக்குறிப்பு. 4. அடுத்து வரும் இரண்டு சூத்திரங்களில் |