பக்கம் எண் :

398தொல்காப்பியம்-உரைவளம்

யஃதான் றடைபொருள் கருதுவிராயிற் குடையொடு
கழுமலந் தந்த நற்றேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் வஞ்சியோ
டுள்ளி விழவி னுறந்தையுஞ் சிறிதே” 1

இவை நற்றாய் தந்தை தன்னையர்க்கு அறத்தொடு நின்றன.

“அன்னாய் வாழிவேண் டன்னை யென்னை
தானு மலைந்தா னெமக்குந் தழையாயின
பொன்வீ மணியரும் பினவே
யென்ன மரங்கொலவர் சார லவ்வே” 2      (ஐங்குறு-201)

இது தழை தந்தமை கூறிற்று.

“சுள்ளி சுனைநீலஞ் சோபா லிகைசெயலை
யள்ளி யளகத்தின் மேலாய்ந்து-தெள்ளி
யிதணாற் கடியொடுங்கா வீர்ங்கடா யானை
யுதணாற் கடிந்தா னுளன்”3      (திணை நூற்-2)

இது களிற்றிடையுதவி கூறிற்று.

“வில்லார் விழவினும் வேலாழி சூழுலகி
னல்லார் விழவகத்து நாங்காணே-நல்லா
யுவர்க்கத் தெறிதிரைச் சேர்ப்பனோ டொப்பார்
சுவர்க்கத் துளராயிற் சூழ்”4       (திணை-நூற்-62)


1. கருத்து: தலைவன் அனுப்பிய சான்றோர் நம்மிடம் பெண் கேட்டு வந்து வருந்திய வருத்தத்தையும் நமது குடிமையையும் நோக்கி அவர் தரும் மணி கொழிக்கும் மலையைப் பரிசமாகக் கொண்டு இவள் முலையாகத்தை மணந்து கொடுப்பின் நல்லது. இல்லையேல் மிக்க பொருளையே பரிசமாகக் கருதுவீராயின் செம்பியனின் விழவுடைய வஞ்சி நகரமும் உள்ளி விழா நடை பெறும் உறையூரும் சிறியனவேயாகும்.

2. கருத்து: பக்கம் 333-ல் காண்க.

3. கருத்து: நறவ மலர் நீலமலர் ஆகியவற்றை அசோக மலருடன் கொய்து கட்டி இவள் கூந்தலின்மேல் ஆய்ந்து சூடியதுடன் பரண் இருந்து இவளால் காவலிருந்து கடியப் படாத கடா யானையையும் தன் அம்பால் கடிந்தான் ஒருவன் உளன்.

4. கருத்து: அன்னையே! உவர்க் கடற்கரையில் இவளுக்கு