பக்கம் எண் :

களவியல் சூ. 24399

இது செவிலி தலைவியைக் கோலஞ் செய்து இவள் நலத்திற்கு ஒப்பான் ஒருவனைப்பெற வேண்டுமென்றாட்குத் தோழி கூறியது.

“பெருங்கடற் றிரையது சிறுவெண் காக்கை
துறைபடி யம்பி யகமனை யீனுந்
தண்ணந் துறைவ னல்கி
னொண்ணுத லரிவை பாலா ரும்மே” 1      (ஐங்குறு-168)

இது, நொதுமலர் வரைவுழி ஆற்றாது பசியட நின்றுழி இதற்குக் காரணமென் னென்ற செவிக்குத் தோழி கூறியது.

“எந்தையும் யாயு முணரக் காட்டி
யொளித்த செய்தியின் வெளிப்படக் கிளந்தபின்
மலைகெழு வெற்பன் றலைவந் திரப்ப
நன்றுபுரி கொள்கை யினொன்றோ வின்றே
முடங்க லிறைய தூங்கணங் குரீஇ
நீடிரும் பெண்ணை தொடுத்த
கூடினு மயங்கிய மைய லூரே” 2      (குறுந்-374)

இஃது அறத்தொடு நின்றமை தலைவிக்குக் கூறியது.


ஓர் உதவி செய்த சேர்ப்பனைப்போல்வாரை வில்வீரர் விழா விடத்தும் மகளிர் விழாவிடத்தும் யாம் காணவில்லை. ஒரு கால் சுவர்க்கத்தில் உள்ளாராயின் நீ சென்று பார்ப்பாயாக.

1. கருத்து: பெரிய கடற்கரையில் உள்ள சிறு வெண் காக்கையானது கடற்றுறையில் உள்ள தோணியில் கூட மைத்து முட்டையிடும்படியான தண்ணந் துறைவன் இவளை வரைந்து கொண்டு அருள் செய்வானாயின் ஒள்ளிய நுதலுடைய அரிவையாகிய இவள் பால் உண்டுத் துயர் ஒழிவாள்.

2. கருத்து: தோழி! நம் மறைந்த ஒழுக்கத்தை தந்தையும் தாயும் அறியுமாறு யான் கூறத் தலைவனும் அவரிடம் வந்து நின்னை மணம் வேண்டியிரக்க இதுவரை தூக்கணங் குருவிக் கூடுபோல பின்னி மயங்கிக் கிடந்த இவ்வூரும் நம் பக்கமாக ஒத்து வந்தது.