பக்கம் எண் :

4தொல்காப்பியம்-உரைவளம்

என்று கொள்க. இனி இம்முறை நிகழாது இடையீடு பட்டும் வரும். அஃதாமாறு, தலைமகள் எதிர்பட்டுழி அன்புடையார் எல்லார்க்கும் இயற்கைப் புணர்ச்சி முட்டின்றிக் கூடுதல் உலகியல் அன்மையான் தலைமகளை யாதானும் ஓரிடத்து எதிர்ப்பட்ட தலைமகன் அவள் காதற்குறிப்புணர்ந்து நின்று, கூட்டத்திற்கு இடையீடு உண்டாயுழியும் ஆண்டுச் சென்ற வேட்கை தணியாது நின்று, முன்னை ஞான்று கண்டாற்போலப் பிற்றை ஞான்றும் காணலாகுமோ என ஆண்டுச் சேறலும், தலைமகளும் அவ்வாறே வேட்கையான் அடர்ப்புண்டு ஆண்டு வருதலும் ஆகிய வழிப் புணர்ச்சி நிகழும். ஆண்டு ஆயத் தாரானாதல் பிறரானாதல் இடையீடுபட்டுழித் தன் வருத்தத்தினைப் பாங்கற்கு உணர்த்தி அவன் தலைமகள் நின்றுழியறிந்துகூற, ஆண்டுச் சென்று புணரும். அவ்விடத்தும் இடையீடு பட்டுழித் தோழி வாயிலாக முயன்றெய்தும். இவ்வாறும், ஒரோவொன்று இடையீடுபட்டு வருதலும் உளவாம். அவ்வாறாயின், இயற்கைப் புணர்ச்சி இடையீடுபட்டுழி வரைந்தெய்தல் தக்கதன்றோ எனின், வரைந்தெய்துந்திறம்1 நீட்டிக்குமாயின் வேட்கை நிறுத்தலாற்றாதார் புணர்ச்சி கருதி முயல்ப. இவ்வாறு சான்றோர் செய்யுள் வந்தனவும் உளவோ எனின், சான்றோர் செய்யுட்களும் இவ்வாறு பொருள் கொள்ள ஏற்பன உள. அவையாவன

“மருந்தின் தீரா மண்ணின் ஆகாது
அருந்தவ முயற்சியின் அகற்றலும் அரிதே
தான்செய் நோய்க்குத் தான்மருந் தாகிய
தேன்இமிர் நறவின் தேறல் போல
நீதர வந்த நிறைஅருந் துயரம்நின்
ஆடுகொடி மருங்கின் அருளின் அல்லது
பிறிதில் தீரா தென்பது பின்நின்று
அறியக் கூறுதும் எழுமோ நெஞ்சே
நாடுவளங் கொண்டு புகழ் நடுதல் வேண்டித்தன்
ஆடுமழைத் தடக்கை அறுத்து முறை செய்த
பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன்
கொற்கைஅம் பெருந்துறை குனிதிரை தொகுத்த


1. மணம் செய்து அடையும் நிலை