பக்கம் எண் :

களவியல் சூ. 15

விளங்குமுத்து உறைக்கும் வெண்பல்
பன்மாண் சாயல் பரதவர் மகட்கே” 1

இதனுள் “ஆடுகொடி மருங்கின் அருளின் அல்லது பிறிதில் தீராது” என்பதனான் இயற்கைப் புணர்ச்சி இடையீடு பட்டு புணர்ச்சி கருதிக் கூறியவாறு காண்க.

“மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த்திரையுள்
பயில்வதோர் தெய்வங்கொல் கேளிர்-குயில் பயிரும்
கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய
கண்ணின் வருந்தும் என்நெஞ்சு”2      (திணைமொழி-43)

இதனுள் ஐயநிலையைப் பாங்கற்கு உரைத்தலின் புணர்ச்சி இன்றாயிற்று.

“கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த
சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம்
வகைசேர் ஐம்பால் தகைபெறவாரிப்
புலர்விடத் துதிர்த்த துகள்படு கூழைப்
பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை


1. கருத்து: மனமே! பொற்கைப் பாண்டியனின் கொற்கை கடலில் விளையும் வெண் முத்துப்போலும் பல்லுடைய பரதவர் மகளிடம் சென்று, நீதரவந்த துயரம் நின்னாலல்லது மருந்தால் தீராது மண்ணால் தீராது தவ முயற்சியாலும் நீங்காது என்று சொல்வோம் எழுக என்பது இப்பாடலின் கருத்து. முதல் நாள் காட்சியின் போது புணர்ச்சி நிகழாது இடையீடு பட்டதால் பின்னாள் தன் நெஞ்சுக்குத் தலைவன் இவ்வாறு கூறினான் எனக் கொள்க. ஆடுகொடி மருங்கின்-அசையும் கொடி போலும் இடையுடையாளாகிய நின்னால். கொடி மருங்கு-உவமைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. தேனால் வரும் நோய்க்குத் தேனே மருந்தாவதுபோலத் தலைவியால் வந்தகாமநோய்க்குத் தலைவியே மருந்து என்க.

2. கருத்து “பாங்கனே! பூம் பொழிலில் என்னை நோக்கினவளின் கண்ணால் வருந்தும் என் நெஞ்சம் அவள் மயிலோ, நீர்த்தெய்வமோ மண்மகளோ என ஐயப்படும்”. எனப் பாங்கனிடம் கூறுவதால் இயற்கைப் புணர்ச்சி நிகழவில்லை என்பது புலப்படும். நிகழ்ந்த தாயின் ஐயப்பாடு நிகழாது.