பக்கம் எண் :

40தொல்காப்பியம்-உரைவளம்

வண்டு மொய்த்தலின் ‘இவள் மண்மகளே’ எனத் துணிவான்.

வண்டு தான் பயின்ற மலர்களிலேயே மொய்க்கும். பயிலாத மலர்களில் மொய்த்தல் இல்லை. இவள் கூந்தல் மலரில் மொய்க்கும் வண்டு நம் பக்கத்து வண்டு; இவள் கூந்தல் மலரும் நம் பக்கத்து மலர்; ஆதலின் இவள் நம் நாட்டாளே எனத் துணிவான்.

இழை:

தெய்வ மகளிர் அணிகலன் செய்யப்பட்டதாகாது. இவள் அணிகலன் செய்யப்பட்டதாகும். அதனால் இவள் மண்மகளே எனத் துணிவான்.

இவள் அணிந்திருக்கும் அணிகலன் நம் பக்கத்து அணிகல னாகும். பிற நாட்டார் அணியும் அணிகலன் அன்று; ஆதலின் இவள் நம் நாட்டாளே எனத் துணிவான்.

வள்ளி:

தோளில் கொடி எழுதி அழகுபடுத்துதல் தமிழர் வழக்கம். ஆதலின் இவள் தோளில் தொய்யிற் கொடி காணப்படுவதால் அவ்வழக்கம் இல்லாத தேவ மகளோ பிற நாட்டாளோ அல்லள் எனத் துணிவான்.

பூ:

தெய்வமகளிர் பூ வாடாமலர். இவள் கைக்கொண்ட பூ, மோந்ததனால் வாடிய பூவாகக் காணப்படுகின்றது. அதனால் தேவமகளல்லள். இவள் பூவைக் கைக்கொண்டுள்ள நிலையும் மோந்து மணம் நுகரும் முறையும் நம் பக்கத்து மகளே என்பதைத் தெரிவிக்கும். ஆதலின் இவள் நம் நாட்டாளே எனத் துணிவான்.

கண்:

கண்ணின் ஒளி தேவமகளிர் கண் ஒளிபோல் இல்லை. மண்மகளுக்குரிய விளக்கத்தில் இருக்கிறது. அதனால் தேவ மகளல்லள். கண்ணில் எழுதிய மை நம் நாட்டவர் எழுதுவது போல் உள்ளது. ஆதலின் பிற நாட்டாளல்லள் எனத் துணிவான்.

அலமரல்:

நின்ற இடத்தில் நிற்காமல் இப்படியும் அப்படியுமாகச் சுழலல். இது பொதுவாக அச்சத்தால் நிகழ்வது. தெய்வமகள்