பக்கம் எண் :

கற்பியல் சூ. 541

நின்ற இடத்தில் நிற்பள், ஆதலின் இவள் தேவமகள் அல்லள் எனத் துணிவான்.

இமைப்பு:

தெய்வப் பெண்ணின் கண் இமையாது. இவள் கண் இமைக் கின்றது. ஆதலின் இவள் மண்மகளே எனத் துணிவான்.

அச்சம்:

தேவப் பெண் அஞ்சுதல் இல்லை. இவள் அச்சம் உடைய வளாகக் காணப்படுகிறாள். ஆதலின் இவள் மண்மகளே எனத் துணிவான்.

மேலே கூறிய கருவிகள் யாவும் ஒருங்கு நிகழும் என்பதில்லை. ஒன்றிரண்டன் நிகழ்ச்சியிலேயே ஐயம் நீங்கித் துணிவான் என்க.

“அன்னவை பிறவும் நிகழ நின்றவை ஆங்கண்களையும் கருவி என்ப” எனக் கூட்டுக. அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ நின்று அவை (ஐயங்களைக்)களையும் கருவி எனினும் ஆம்.

நோக்கம்

93. நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக்
  கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும்

ஆ. மொ.

இல.

The two eyes will play their Parts to bring them together.

பி. இ. நூ.

நம்பி. 112.

அரிவை நாட்டம் அகத்து நிகழ் வேட்கை
தெரிய வுணர்த்துங் குரிசிற் கென்ப.

மாறன். 10,11

கண் இணை புகுமுகம் புரிதலின் காரிகை
உள்நிறை வேட்கை உரவோற்கு உணர்த்தும்.