இது முற்காலத்து வரைவு கடாவுமாறு போலன்றி வரைவு கடாயது. “யாரை யெலுவ யாரே நீயெமக் கியாரையு மல்லை நொதும லாளனை யனைத்தாற் கொண்கவெம் மிடையே நினைப்பிற் கடும்பகட் டியானை நெடுந்தேர்க் குட்டுவன் வேந்தடு மமயத்து முரசதிர்ந் தன்ன வோங்கற் புணரி பாய்ந்தாடு மகளி ரணிந்திடு பல்பூ மரீஇ யார்ந்த வாபுலம் புகுதரு பேரிசை மாலைக் கடல்கெழு மரந்தை யன்னவெம் வேட்டனை யல்லையா னலந்தந்து சென்மே” 1 (நற்றிணை-395) இது நலந்தொலைவுரைத்து வரைவு கடாயது.
எனப்படுவது உறவுடையார் கூறியதை மறாமை. நிறை எனப்படுவது தாம் மறைத்து வைத்த ஒன்றைப் பிறர் அறியாமல் வைத்திருப்பது. நீதி என்பது தமராயினும் அவர் செய்த குற்றத்துக்கேற்ப உயிர் வௌவுதல். பொறை எனப்படுவது பகைவரைக் காலம்வரும் துணையும் பொறுத்திருத்தல். அக் குணங்களையெல்லாம் நீ அறிந்தனை என்றால் யான் கூறுவதைக் கேள். நீ என் தோழியின் நலன் உண்டு அவளைத் துறத்தலானது பாலை யுண்டு கலத்தைத் துறப்பது போலாம். நின்னால் வருத்தம் உற்ற என் தோழியை வரைந்து கொள்வதால் துயர் போக்குவாயாக. அதற்காக நின் தேர் விரைவில் பூட்டப்படுவதாக. 1. கருத்து: எலுவ! (நண்பனே) யாரை நீ நட்பாகவுடையை. எமக்கு நீ என்ன உறவு? எமக்கு எந்த உறவினனும் இல்லை. நொதுமலாளனே யாவாய். நி எம்மிடையே நடந்து கொள்வதை நினைப்பின் அப்படிப் பட்டதாயிருந்தது. குட்டுவனது பகைக் களத்து முரசு ஒலிப்பதுபோல் ஒலியுடைய கடலில் மகளிர் ஆடிக் கழித்த மலர்களையுண்ட பசு தம்பதி திரும்பும் மாலைக் காலத்தையுடைய கடல் பொருந்திய மாந்தை நகர் போலும் வளமுடைய எம்மை நீ விரும்பினாய் என்றால் நின்னால் யாங்கள் இழந்த நலனைத் திரும்பத் தந்துவிட்டுச் செல்வாயாக. தொ-26 |