ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட-அங்ஙனம் கடாவியவழி அவ்வரைந்துகோடல் மெய்யாயினமையின் வதுவை முடியுமளவும் ஆற்றுதற்கு வற்புறுத்துக் கூறுதல் உளப்பட: தன்மை-மெய்ம்மை. எனவே முன் பொய்மையான வற்புறுத்தலும் பெற்றாம். (உ-ம்) “நெய்கனி குறும்பூழ் காய மாக வார்பதம் பெறுக தோழி யத்தை பெருங்க னாடன் வரைந்தென வவனெதிர் நன்றோ மகனே யென்றனெ னன்றே போலு மென்றுரைத் தோனே”1 (குறுந்-389) இது தலைவன் குற்றேவன் மகனான் வரைவு மலிந்த தோழி தலைவிக்குரைத்தது. (உ-ம்) “கூன்முண் முண்டகக் கூனி மாமலர் நூலறு முத்திற் காலொடு பாறித் துறைதொறும் பரிக்குந் தூமணற் சேர்ப்பனை யானுங் காதலென் யாயுநனி வெய்ய ளெந்தையுங் கொடீஇயர் வேண்டு மம்ப லூரு மவனொடு மொழிமே” 2 (குறுந்-51) எனவும் வரும். “கொடிச்சி காக்கு மடுக்கற் பைந்தினை முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி
1. தோழீ! தலைவன் வரைவுக் குரியவற்றை மேற்கொண்டானாக அவன் ஏவலனைப் பார்த்துக் குறிப்பாக நன்றோ என வினவினேன். அவனும் வரைவு உறுதி என்பான் நன்று என்றான். அதனால் அவ்வேவலன் குறும்பூழ்ப் பறவைக் குழம்புடன் சோறு பெறுவானாக. 2. கருத்து: பக்கம் 334-ல் காண்க. |