பக்கம் எண் :

404தொல்காப்பியம்-உரைவளம்

இது தலைவன் வரைவொடு வருகின்றமை காண்கம் வம்மோ வென்றது.

பாங்குற வந்த நாலெட்டும்-பாங்கியர் பலருள்ளும் பாங்காந் தன்மை சிறப்பக் கூறிய முப்பத்திரண்டும். ‘நாலெட்டும்’ என உம்மை விரிக்க.

வகையும்-இக்கூற்றுக்களிலே வேறுபட வருவனவும், தாங்கருஞ் சிறப்பின் தோழிமேன-பொறுத்தற்கரிய சிறப்பினையுடைய தோழியிடத்தன என்றவாறு.

எனவே, ஒன்றிய தோழிக்கன்றி ஏனையோர்க்கு இக்கூற்று இன்றென்றான். தாய்த்தாய்க் கொண்டுவருஞ் சிறப்பும், இருவர் துன்பமுந் தான் உற்றாளாகக் கருதுஞ் சிறப்பும் உடைமையின் ‘தாங்கருஞ் சிறப்பு’ என்றான். உரைத்துழிக் கூட்டத்தோடே அகற்சியும் என்றலும் ஊட்டலும் உரைத்தலும் அச்சுறுத்தலும் எஞ்சாமற் கிளந்த இருநான்கு கிளவியும் பாங்குற வந்த என்க, நாட்டத்தின்கண்ணும் எஞ்சாமற் கிளந்த என்க. என்றது, ஆராய்ச்சியுடனே இவ்வெட்டுங் கூறுமென்றான். பெயர்ப்பினும் ஒழிப்பினும் உரைத்துழிக் கூட்டத்தோடு எஞ்சாமற் கிளந்த என்க. ஏனைப் பொருள்கள் ஏழனுருபும் வினையெச்சமுமாய் நின்றவற்றைப் பாங்குற வந்த என்பதனோடு முடித்து, அப்பெயரெச்சத்தினை நாலெட்டென்னும் பெயரோடு முடித்து அதனைத் தோழி மேனவென முடிக்க.

இனி ‘வகை’ யாற் கொள்வன வருமாறு:-

“அன்னை வாழிவேண் டன்னை நெய்த
னீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவ
னெந்தோ டுறந்த காலை யெவன்கொல்
பன்னாள் வருமவ னளித்த போழ்தே” 1      (ஐங்குறு-109)


நுகர்ந்து நம் மெய்யின் நலம்கேடச் சென்றானாயினும் இனிவரைவோடு வருதலைக் குன்றம்போல் உயர்ந்து தோன்றும் வெண்மணலில் ஏறி நின்று காண்போம் வா தோழி.

1. கருத்து; அன்னாய்! வாழி துறைவன் எம் தோளை மணந்த காலத்தில் என்னைத் தெளிவித்துக் கூறிய சொற்கள் வரைவிடை வைத்துப் பிரிந்த இக்காலத்தில் பல முறையும் நெஞ்சில் வருகின்றன. என்ன காரணம்?