பக்கம் எண் :

406தொல்காப்பியம்-உரைவளம்

“நொதும லாளர் கொள்ளா ரிவையே
யெம்மொடு வந்து கடலாடு மகளிரு
நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையா
ருடலகங் கொள்வோ ரின்மையிற்
றொடலைக் குற்ற சில பூவினரே” 1      (ஐங்குறு-187)

இது கையுறை மறுத்தது.

“அம்ம வாழி தோழி நம்மலை
வரையா மிழியக் கோட னீடக்
காதலர்ப் பிரிந்தோர் கையற நலியுந்
தண்பனி வடந்தை யச்சிர
முந்துவந் தனர்நங் காத லோரே” 2      (ஐங்குறு-223)

இது வரைவிடைப் பிரிந்தோன் குறித்த பருவத்திற்கு முன் வருகின்றமையறிந்த தோழி தலைவிக்குக் கூறியது


எவ்வளவு பொன்னை விரும்புகிறார்கள்? ஏந்திழையே! நமர் அவருடன் மணத்தை ஏற்காத நாளில் பின்னர் அமர் வரும் என்று அஞ்சினேன்.

1. கருத்து: பெரும! நீ கொண்டு வந்துள்ள நெய்தல் மலரே தலைமை மலராகக் கொண்டு புனைந்துள்ள இந்த பகைமையான தழை மாலையை எம்முடன் வந்து புனலாடும் மகளிர் தம் பாவைக்கும் புனையார்.வேறு மலர் விரவாமல் நெய்தல் மலரே தொடுத்து அணிந்து கொள்வோரும் இலர். ஆகலின், மாலை தொடுப்போரும் இதனிற் சில மலரே கொள்வர். ஆகலின் இத்தழை மாலையை யாம் ஏற்பின் நொதுமலாளரும் ஆராய்தற்கு இடமாமே.

2. கருத்து: தோழீ! கேட்பாயாக மலையினின்றும் அருவியிழியச் செங்காந்தள் மலர காதலர்ப் பிரிந்தோர் துன்புற வருத்தும் குளிர்ந்த வாடைக் காற்று வரும் முன்பனிக் காலத்து வருவதாகப் பிரிந்து சென்ற காதலர் சொன்ன அப்பருவம் வருவதற்கு முன்னரே வந்தார்.