பக்கம் எண் :

410தொல்காப்பியம்-உரைவளம்

அஃதாவது “கடவுட் கற்சுனை” எனத் தொடங்கும் நற்றிணைப்பாட்டில்,

“நின்னணங் கன்மை அறிந்தும் அண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவு ளாயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே”1      (நற்றிணை-34)

எனத் தோழி கூறுதல். அவ்வாறு கூறியவழியுங் காரணமென்னை யென வினாவும்.

காதல் கைம்மிகக் கனவி னரற்றலும் என்பது-காதன் மிகுதியால் தலைவனையுள்ளிக் கனவின்கண் அரற்றுதற்கண்ணும் வினாவும்.

தோழியை வினாதலும் என்பது-இவை நிமித்தமாகத் தோழியை வினாதலும் என்றவாறு. எனவே களவலராதல் முதற் கனவினரற்றலீறாக ஓதிய வொன்பது கிளவியும் தோழியை வினாதற் பகுதி. அவை நிகழாதவழி வினாதலில்லை. அதனால் தோழியை வினாதலென ஒரு கிளவியாக எண்ணற்க.

தெய்வம் வாழ்த்தலும் என்பது-இவ்வாறு பட்டதெனத் தோழியுரைத்தவழியிதனை நற்றாய்க்கும் தந்தைக்கும் கூறலாற்றாதாள் தெய்வத்தை வேண்டிக் கோடல்.

போக்குடன் அறிந்த பின்.. நிற்றற் கண்ணும் என்பது-தலைவனுடன் போயினாள் என்று அறிந்தவழித் தானும் தோழியோடு கெழுமி இல்லறத்தின்க ணிறுத்தற்கண்ணும் என்றவாறு.

“பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்


1. கருத்து: முருகனே! இவட்கு வந்த நோய் நின் வருத்துதலால் வந்ததன்று என்பதை நீ அறிந்திருந்தும் வெறிக்களத்தில் வேலன் வேண்ட வந்தாய். நீ கடவுளாயினும் ஆக. அறியாமையுடையவன் தான்.