தானே கூறப்படுவனவுந் தலைவியுந் தோழியும் அவள் கூற்றாய்க் கொண்டெடுத்து மொழியப்படுவனவுமாய்ச் செவிலிக்குரியவா மென்றவாறு. ‘இன்னவகை’ என்றார் தன்கூற்றுங் கொண்டு கூற்றுமாய் நிகழுமென்றற்கு. (இ-ள்) : களவு அலர் ஆயினும்-களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாய் அலர் தூற்றப்படினும். (உ-ம்) பாவடி யுரல பகுவாய் வள்ளை யேதின் மாக்க ணுவறலு நுவல்ப வழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய நல்லியற் பாவை யன்னவென் மெல்லியற் குறுமகள் பாடிநள் குறினே”1 (குறுந்-89) இது செவிலி தானே கூறியது. “அம்ம வாழி தோழி நென்ன லோங்குதிரை வெண்மண லுடைக்குந் துறைவற்கு ஊரார் பெண்டென மொழிய வென்னை யதுகேட் டன்னா யென்றன ளன்னை பைபைய வெம்மை யென்றனென் யானே”2 (ஐங்குறு-113)
1. கருத்து: பொறையனது கொல்லி மலையின் மேற்கே தெய்வம் எழுதி வைத்த கொல்லிப் பாவை போன்ற எம் தலைவியானவள் பரந்த அடிப்பாகம் உடைய உரலில் உள்ள தினையை வள்ளைப் பாட்டுப் பாடிக் கொண்டே குற்றினால் அப்பாடலில் வரும் கருத்துகளைக் கண்டு அயற்பெண்டிர் இவள் களவொழுக்கம் அறிந்து தூற்றினும் தூற்றுவர். அப்படித் தூற்றும் பேதையர் வாழும் ஊர்க்காக நாம் வருந்துவதிற் பயன் என்னை? 2. கருத்து: தோழீ! கேட்பாயாக. ஊரார் துறைவற்குரிய பெண்டு இவள் எனக் கூறும் அலர் கேட்டு அன்னை என்னைப் பார்த்து ‘அன்னாய் என்ன இது’ என வினவினாள். நான் அதற்கு மெல்ல மெல்ல ‘எம்மை’ |