இதனுள், பெண்டென்றதனைக் கேட்டு அன்னாயென்றனள் அன்னையென அலர் தூற்றினமை கண்டு செவிலி கூறிய கூற்றினைத் தலைவி கொண்டு கூறியவாறு காண்க. காமம் மெய்ப்படுப்பினும்-தலைவி கரந்தொழுகுங் காமத்தானே அக்களவினை நன்றாயுந் தீதாயும் மெய்க்கண் வெளிப்படுப்பினும். (உ-ம்): “மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை யணியிற் றிகழ்வதொன் றுண்டு”1 (குறள்-1273) இது காமத்தால் திகழ்ந்த பொலிவினைச் செவிலி தானே கூறியது. அளவு மிகத் தோன்றினும்-கண்ணுந் தோளும் முலையும் பிறவும் புணர்ச்சியாற் கதிர்த்துக் காரிகை நீரவாய் அவளிடத்து அளவை மிகக் காட்டினும். (உ-ம்) “கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்ணிறைந்த நீர்மை பெரிது”2 (குறள்-1272) இது கதிர்ப்புக் கண்டு செவிலி தானே கூறியது. “பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன்னென வாகத் தரும்பிய சுணங்கும் வம்புடைக்
என்றேன். இதுதான் நேற்று நடந்தது. (எம்மை எனத் தலைவனை உளப்படுத்தி எங்களைப்பற்றி ஊரார் தவறாகக் கூறுகின்றனர் எனக் கூறத் தொடங்கி எம்மை என்ற அளவில் நிறுத்தினாள்) 1. கருத்து: பக்கம் 409-ல் காண்க. 2. கருத்து: கண்ணுக்கு நிறைந்த அழகும் மூங்கில் போலும் தோளும் உடைய இப் பேதைப் பெண்ணுக்கு-காதலிக்குப் பெண்மைத் தன்மை நிறைந்துவிளங்கும் இயல்பு மிகுதியாகவுள்ளது. |