கண்ணுருத் தெழுதரு முலையு நோக்கி யெல்லினை பெரிதெனப் பன்மாண் கூறிப் பெருந் தோளடைய முயங்கி நீடுநினைந் தருங்கடிப் படுத்தனள் ................................................................................ தாரார் மார்பநீ தணந்த ஞான்றே” 1 (அகம்-150) இது தோழி கொண்டுகூறியது. தலைப்பெய்து காணினும்-இருவர்க்குங் கூட்டம் நிகழ்தலானே தலைவனை இவ்விடத்தே வரக்காணினுந் தலைவியைப் புறத்துப் போகக் காணினும். பெய்தென்பது காரண காரியப் பொருட்டாய்ப் பிறவினை கொண்டது. (உ-ம்) “இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப் புலவுநாறு புகர்நுதல் கழுவக் கங்கு லருவி தந்த வணங்குடை நெடுங்கோட் டஞ்சுவரு விடர்முகை யாரிரு ளகற்றிய மின்னொளி ரெஃகஞ் சென்னெறி விளக்கத் தனியன் வந்து பணியலை முனியா னீரிழி மருங்கி னாரிடத் தமன்ற குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி யசையா நாற்ற மசைவளி பகரத் துறுக னண்ணிய கறியிவர் படப்பைக் குறியிறைக் குரம்பைநம் மனைவயிற் புகுதரு மெய்ம்மலி யுவகைய னந்நிலை கண்டு முருகென வுணர்ந்து முகமன் கூறி யுருவச் செந்தினை நீரொடு தூஉய்
1. கருத்து: தாரணிந்த மார்புடைய தலைவனே! நீ இவளைக் கூடிப் பிரிந்த காலத்துத் தாயானவள், பின்னலுடைய கூந்தலும் உடம்பிற் சுணங்கும் எழும் முலையும் பார்த்து மிகவும் ஒளியையுடையையானாய் எனப்பல தடவை கூறித் தோளைத் தழுவி ஏதோ பெரிதாக நினைந்து இற்செறிப்புப் படுத்தினாள். |