“அறியா மையின் வெறியென மயங்கி யன்னையு மருந்துய ருழந்தன ளதனா லெய்யாது விடுதலோ கொடிதே நிரையித ழாய்மல ருண்கண் பசப்பச் சேய்மலை நாடன் செய்த நோயே”1 (ஐங்குறு-242) இது வெறியென அன்னை மயங்கினமை கூறிற்று. ‘அணங்குடை நெடுவரை’ என்னும் (22) அகப்பாட்டினுட் கட்டுக்கண்டு வெறியெடுத்தமை கூறிற்று. ‘பனிவரை நிவந்த’ என்னும் (98) அகப்பாட்டினுட் பிரப்புளர்பிரீஇ’ எனக் கட்டுவிச்சியைக் கேட்டவாறும் ‘என் மகட்கு’ எனச் செவிலிகூற்று நிகழ்ந்தவாறுங் காண்க. இதனுள் ‘நெடுவேணல் குவனெனினே’ எனத் தலைவி அஞ்ச வேண்டியது, இருவரும் ஒட்டிக்கூறாமல் தெய்வந்தான் அருளுமென்று கோடலின். “இகுளை கேட்டிசிற் காதலந் தோழி குவளை யுண்கண் டெண்பனி மல்க வறிதியான் வருந்திய செல்லற் கன்னை பிறிதொன்று கடுத்தன ளாகி வேம்பின் வெறிகொள் பாசிலை நீலமொடு சூடி யுடலுநர்க் கடந்த கடலந் தானைத் திருந்திலை நெடுவேற் றென்னவன் பொதியி லருஞ்சிமை யிழிதரு மார்த்துவர லருவியிற் றதும்புசீ ரின்னியங் கறங்கக் கைதொழு துருகெழு சிறப்பின் முருகு மனைத்தரீஇக் கடம்புங் களிறும் பாடி நுடங்குபு தோடுந் தொடலையுங் கைக்கொண் டல்கலு
1. கருத்து: உண் கண் பசப்ப மலை நாடன் தன் பிரிவாற் செய்த நோயினை அறியாமையால் வெறியயர்தலால் தீர்க்க முயன்று தாயும் துயருழந்து வருந்தினாள். அதனால் அவன் செய்த நோயினை வேலன் அறியாது விடுதல் கொடிதாகும். ஆதலின் அதனை அறிவித்தல் வேண்டும். |