மாடின ளாத னன்றோ நீடு நின்னொடு தெளித்த நன்மலை நாடன் குறிவர லரைநாட் குன்றத் துச்சி நெறிகெட வீழ்ந்த துன்னருங் கூரிருட் டிருமணி யுமிழ்ந்த நாகங் காந்தட் கொழுமடற் புதுப்பூ வூதுந் தும்பி நன்னிற மருளு மருவிட ரின்னா நீளிடை நினையுமெ னெஞ்சே”. (அகம்-138) என்னும் மணிமிடைபவளம் விதந்து கூறாமையின் இரண்டும் ஒருங்கு வந்தது. ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும்-அங்ஙனம் வெறியாடுதல் வேண்டிய தொழின் முடிந்தபின்னுந் தலைவிக்கு வருத்தம் மிகினும்: (உ-ம்) “வேங்கை யிரும்புனத்து வீழுங் கிளிகடியாள் காந்தண் முகிழ்விரலாற் கண்ணியுங் கைதொடா ளேந்தெழி லல்குற் றழைபுனையா ளெல்லேயென் பூந்தொடி யிட்ட புலம்பு மறிதிரோ” எனவும், “புனையிருங் குவளைப் போதுவரி நாற்றஞ் சுனையர மகளி ரவ்வே சினைய
1. கருத்து: தோழீ! கேட்பாயாக. நன்மலைநாடனானவன், மணியினை உமிழ்ந்த நாகம் காந்தளை யூதிய வண்டு அதன் செவ்விய மகரந்தம் அளையப் பெற்றமையால் செம்மை நிறமாகத் தோன்ற அதைத் தன் செம்மணி என மருளும்படியான விடர்களையுடைய கொடிய வழியைக் குறியிடம் வருதற்கு பாதியிரவில் இருளில் வருவது எண்ணியதால் கண்ணில் நீர் வந்தது. அதனைக் கண்டதாய் அதற்கு வேறு கருத்துக் கொண்டாளாகக் கட்டுவிச்சியும் வேலனும் முருகனை அழைத்து அவன் கடம்ப மாலையையும் வாகனமாகிய களிற்றினையும் பாடி நாளும் ஆடினராயும் பாடினராயும் வெறியயர்தல் நல்லதாமோ? தொ-27 |