பக்கம் எண் :

418தொல்காப்பியம்-உரைவளம்

வேங்கை யொள்வீ வெறிகமழ் நாற்றமொடு
காந்த ணாறுப கல்லர மகளி
ரகிலு மாரமு நாஅ றுபவன்
றிறலரு மரபிற் றெய்வ மென்ப
வெறிபுனங் காவ லிருந்ததற் றொட்டுத்
தீவிய நாறு மென்மக
னறியேன் யானிஃ தஞ்சுதக வுடைத்தே”1

எனவும் வரும்.

இவை ஆற்றாமை கண்டு அஞ்சிச் செவிலி பிறரை வினாயின.

“அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள்
பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு
நனிபசந் தனளென வினவுதி யதன்றிறம்
யானுந் தெற்றென வுணரேன் மேனாண்
மலிபூஞ் சாரலென் றோழி மாரோ
டொலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப்
புலிபுலி யென்னும் பூச றோன்ற
வொண்செங் கழுநீர்க் கண்போ லாயித
ழூசி போகிய சூழ்செய் மாலையன்
பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன்
குயமண் டாகஞ் செஞ்சாந்து நீவி
வரிபுனை வில்ல னொருகணை தெரிந்துகொண்
டியாதோ மற்றம் மாதிறம் படரென
வினவி நிற்றந் தோனே யவற்கண்
டெம்மு ளெம்முண் மெய்ம்மறை பொடுங்கி
நாணி நின்றன மாகப் பேணி
யைவகை வகுத்த கூந்த லாய்நுதன்


1. கருத்து: என் மகளணிந்த குவளையின் மணம் சுனையர மகளிரிடம் போய்விட்டது. வேங்கை மலர் காந்தள் மலர்களின் மணம் மலையர மகளிரிடம் போயிற்று. அகில் மணமும் சந்தன மணமும் வீசுபவன் தெய்வமாவான். தினைப்புனங் காவல் இருந்த காரணத்துக்காக மேற்கூறிய மணங்களை யிழந்து என் மகள் இனிய மணம் நாற நிற்பள். இதன் காரணம் யான் அறியேன்.