பக்கம் எண் :

420தொல்காப்பியம்-உரைவளம்

அரற்றல்-இன்னதோர் இன்னாக்காலத்து என் செய்கின் றாயெனக் காதல்பற்றி இரங்குதல்.

தோழியை வினவலும்-நின்றோழிக்கு இவ் வேறுபாடு எற்றினானாயிற்றென்றாற் போலத் தோழியை வினாவுதலும்

(உ-ம்)

“நெடுவே லேந்தி நீயெமக் கியாஅர்
தொடுத லோம்பென வரற்றலு மரற்றுங்
கடவுள் வேங்கையுங் காந்தளு மலைந்த
தொடலைக் கண்ணி பரியல மென்னும்
பாம்புபட நிவந்த பயமழைத் தடக்கைப்
பூம்பொறிக் கழற்கா லாஅய்குன் றத்துக்
குறுஞ்சுனை மலர்ந்த குவளை நாறிச்
சிறுதேன் கமழ்ந்த வம்மெல் லாகம்
வாழியெம் மகளை யுரைமதி யிம்மலைத்
தம்பொதி கிளவியென் பேதை
யாங்கா டினளோ நின்னொடு பகலே” 1

எனவரும். இது செவிலி தோழியை வினாயது.

“ஓங்குமலை நாட வொழிகநின் வாய்மை
காம்புதலை மணந்த கல்லதர்ச் சிறுநெறி
யுறுபகை பேணா திரவின் வந்திவள்
பொறிகிள ராகம் புல்லா தோள்சேர்
பறுகாற் பறவை யளவில மொய்த்தலிற்
கண்கோ ளாக நோக்கிப் பண்டு


1. கருத்து: என் மகளே! ஆய் என்பான் குன்றத்துச் சுனைக் குவளை மணம் வீசித் தேன்மணமும் கமழும் மெல்லிய ஆகத்தையும் இனிய சொல்லையும் உடைய என் மகள் (தலைவி) களவில், ‘ஏ வேலுடையவனே நீ எமக்கு என்ன உறவு? என்னைத் தொடவும் தொடாதே நீ கொண்டு வந்த வேங்கை மலரும் காந்தளும் விரவிய மாலையை யாங்கள் அணிய மாட்டோம்’ என்று இப்படி அரற்றுகிறாள். அவள் நின்னொடு ஆடிய இடம் யாது? கூறுக வாழி.