பக்கம் எண் :

களவியல் சூ. 25421

மினையை யோவென வினவினள் யாயே
யதனெதிர் சொல்லா ளாகி யல்லாந்
தென்முக நோக்கி யோளே யள்னா
யாங்குணர்ந் துய்குவள் கொல்லென மடுத்த
சாந்த ஞெகிழி காட்டி
யீங்கா யினவா லென்றிசின் யானே” 1      (நற்றிணை-55)

இது செவிலி வினாயினமையைத் தோழி கொண்டுகூறினாள்.

தெய்வம் வாழ்த்தலும்-இன்னதென்று நிகழ்ந்ததெனத் துணிந்த பின்னர்த் தன் மகளொடு தலைமகனிடை நிகழ்ந்த ஒழுக்கம் நன்னர்த்தாகவெனத் தெய்வத்திற்குப் பராவுதலும்.

(உ-ம்)

“பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய
செறிமடை யம்பின் வல்விற் கானவன்
பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு
நீரகழ் சிலம்பி னன்பொ னகழ்வோன்
கண்பொரு திமைக்குந் திருமணி கிளர்ப்ப
வைந்நுதி வான்மருப் பொடிய வுக்க
தெண்ணீ ராலி கடுக்கு முத்தமொடு
மூவேறு தாரமு மொருங்குடன் சாற்றிச்
சாந்தம் பொறைமர மாக நறைநார்


1. கருத்து: ஓங்கு மலைநாடனே! நின் வாய்மைக் கூற்றுகளை ஒழிவாயாக. கற்பாறைச் சிறுவழியில் வந்து இவளைப் புணர்ந்தபோது நின் மாலை மலர் மணம் இவள் தோளில் அமைய வண்டுகள் வந்து மொய்த்தலைக் கண்ட தாய் ‘இப்படி முன்னரும் வண்டுகள் மொய்க்கும்படி இருந்தனையோ’ என வினவினள். அதற்கு விடைகூற இயலாது என் தோழி என்னை நோக்கினள். யான் இவள் எப்படிப் பதில்கூறி உய்வாளோ என எண்ணி உடனே அன்னாய் இச் சந்தன விறகை அடுப்பில் வைக்க எடுத்தபோது அதனிடம் இருந்த வண்டுகள் இப்படி மொய்த்தன என்றேன். இதுவே யான் இவளை ஆற்றியவாறாம்.