பக்கம் எண் :

422தொல்காப்பியம்-உரைவளம்

வேங்கைக் கண்ணிய னிழிதரு நாடற்
கின்றீம் பலவி னேர்கெழு செல்வத்
தெந்தையு மெதிர்ந்தனன் கொடையே யலர்வா
யம்ப லூரு மவனொடு மொழியுஞ்
சாயிறைத் திரண்ட தோள்பா ராட்டி
யாயு மவனே யென்னும் யாமும்
வல்லே வருக வரைந்த நாளென
நல்லிறை மெல்விரல் கூப்பி
யில்லுறை கடவுட் கோக்குதும் பலியே” 1      (அகம்-282)

இதனுள் ‘தோள் பாராட்டி, யாயுமவனே யென்னும்’ என்று யாய் தெய்வம் பராயினாளென்பது படக் கூறி யாம் அத்தெய்வத்திற்குப் பலி கொடுத்து மென்றவாறு காண்க.

போக்குடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக் கற்பின் ஆக்கத்து நிற்றற் கண்ணும்-உடன்போக்கு அறிந்தபின்னர்ச் செவிலி தோழியொடு மதியுடம்பட்டு நின்று தலைவியது கற்பு மிகுதியே கருதி உவந்த உவகைக் கண்ணும்.

அது

“எம்மனை முந்துறத் தருமோ
தன்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே”      (அகம்-195)

என்றாற் போலக் கற்பினாக்கத்துக் கருத்து நிகழ்தல்.

(உ-ம்)

“முயங்குகம் வாராய் தோழி தயங்குபு
கடல்பெயர்ந் தன்ன கானலங் கல்லெனப்
பெயல்கடைக் கொண்ட பெருந்தண் வாடை

1. கருத்து: தோழீ! “கடல் பெயர்ந்தாற்போலக் கல்லென மழைபெய்த கடைசியில் வந்த வாடையின் குளிரைத் தன் முலை வெப்பத்தால் கணவனுக்கு ஆற்றி அவனுடன் சென்றாள் நின் தோழி; இனி என்று நம்மூர் வருமோ” என்று என் தாய் (செவிலி) என்னிடம் கூறினாள். அவள்நின் கற்பின் ஆக்கத்தில் நின்றாள் ஆதலின் நாம்முயங்குதல் போல் மகிழ்வோம் வாராய்-தோழி தலைவியிடம் கூறியது.