வருமுலை வெப்பங் கொழுநற் போற்றிய சென்றன ளம்மநின் றோழி யவனோடு என்றினி வருஉ மென்றனள் வலந்துரை தவிர்ந்தன் றலர்ந்த வூரே” இது, செவிலி கற்பினாக்கத்து நின்றமை தோழி கூறியது. பிரிவின் எச்சத்தும்-தலைவி உடன்போயவழித் தான் பின் செல்லாதே எஞ்சுதலும் உளவாதலின் ஆண்டுக் கூறுவனவும். (உ-ம்): “தெறுவ தம்ம நும்மகள் விருப்பே யுறுதுய ரவலமொ டுயிர்செலச் சாஅய்ப் பாழ்படு நெஞ்சம் படரடக் கலங்க நாடிடை விலங்கிய வெற்பிற் காடிறந் தனணங் காத லோளே”1 (ஐங்குறு-313) இது பின்செல்லாது வருந்தியிருந்த செவிலியைக் கண்ட நற்றாய் கூறியது. இது, நற்றாய் கூற்றாய்ச் செவிலிமேன’ ஆயிற்று. மகள் நெஞ்சு வலிப்பினும்-உடன் போக்கிற்கு மகள் நெஞ்சு துணியினும். தன்மேல் அன்பு நீங்கியது உணர்ந்து செவிலி கூறும். (உ-ம்) “பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனெ னென்றன ளினியறிந் தேனது துனியா குதலே கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில்
1. கருத்து: மிக்க துன்பத்தோடு நெஞ்சம் உயிர்போமாறு மெலிந்து பாழ்படும். தன்னை நாம் நினைத்தலாற் கலக்கம் எய்த நம் காதலோளாகிய மகள் நாடிடையிட்ட இடங்களையுடைய காட்டு வழியில் தன் கேள்வனுடன் சென்றனள். அவள்பால் (நம் மகள்) கொண்ட விருப்பம் நம்மை வருத்துவதாயிற்று. |