பக்கம் எண் :

களவியல் சூ. 26425

செவிலி மேன-தன் கூற்றாயும் பிறர்கொண்டுகூறுங் கூற்றாயும் கூறுங் கூற்றுச் செவிலிக்கு உரியவாம் என்றவாறு.

‘அன்னபிற’ என்றதனால்,

“பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி யாய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே”1      (குறுந்-15)

இஃது உடன்போயபின் செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.

இன்னும் அதனானே,

“வல்லுரைக் கடுஞ்சொ லன்னை துஞ்சாள்”      (அகம்-122-4)

என்றலும்,

“சிறுகிளி கடித றேற்றா ளிவள்”      (அகம்-28-12)

என்றலும்.

“கண்கோ ளாக நோக்கிப் பண்டு மினையையோ”      (நற்றிணை-55-67)

என்றலும் போல்வன பிறவுங் கொள்க.

நற்றாய்க்கும் அக்கூற்றுகள் உரிய

114. தாய்க்கும் வரையார் உணர்வுடம் படினே      (26)

ஆ. மொ.

இல.

These thirteen and other expressions are not forbidden to the mother also if she is in the know of things.


1. கருத்து: பக்கம் 411-ல் காண்க.