பக்கம் எண் :

களவியல் சூ. 27 427

ஆ. மொ.

இல.

Thinking that she has not the wisdom to find out her partner, the mother and foster-mother may approach the wise people for clearing their doubt about the choice of the partner on the part of the lady-love.

இளம்.

இது நற்றாயும் செவிலியும் துணியுமாறு கூறுகின்றது.

(இ-ள்) : கிழவோன் அறியா அறிவினள் என்பது-தலைமகன் அறியா அறிவினையுடையவள் என்றவாறு. எனவே ஒரு பக்கம் எதிர்காலம் நோக்கிக் கூறினார்போலத் தோன்றும். ஒரு பக்கம் இறந்தகாலம் தோன்றும். அவன் அறியாத அறிவுரிமை பூண்டு மயங்குதல், அவள் எத்துணையும் மயக்கமிலள் எனவும் அவன் பொருட்டு மயங்கினாள் எனவும் படக் கூறுதல். தலைவன் அறியாத அறிவினையுடையவள் எனக் குற்றமற்ற சிறப்பினையுடைய உயர்ந்தோர் மாட்டு உளதாகிய ஐயக் கிளவியால் புணர்ப்பறிதலும் உரித்து, செவிலிக்கும் நற்றாய்க்கும் என்றவாறு.

இஃது எற்றினான் ஆயிற்று எனக்குற்றமற்ற தவரை வினாயவழி அவர் இவ்வாறு பட்டதென மெய்கூறுதலுந் தகுதியன்றாம் பொய் கூறுதலும் தகுதியன்றாம். ஆதலால் ஐயப்படுமாறு சில கூறியவழி அதனானே யுணர்ப என்றவாறு. கிழவோனறியாவறிவின ளென்றவாறு கூறியவழிக் கிழவோனெதிர்ப்பட இறந்த காலத்துள் தலைவன் உளன் என்றவாறாம்.

நச்.

இஃது அங்ஙனங் களவு வெளிப்பட்ட பின்னர் நற்றாய்க்குஞ் செவிலிக்கும் உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்) : கிழவோன் அறியா அறிவினள் இவளென ஐயக் கிளவி-நங்குலத்திற்கு ஒத்த தலைவனை அறிந்து கூடாத அறிவினையுடையள் இவளென்று தம் மனத்தை ஐயமுற்றும் பிறரோடு உசாவுங் கிளவியை, மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின் அறிதலும் உரித்தே-குற்றமற்ற சிறப்பினையுடைய அந்தணர் முதலியோரிடத்தே கூறி அதுவும் முறைமையென்று அவர் கூற அறிதலும் உரித்து என்றவாறு.