பக்கம் எண் :

களவியல் சூ. 28 429

அது துணிதலின் அருமை

116. தன்னுறு வேட்கை கிழவன்முன் கிளத்தல்
 எண்ணுங் காலை கிழத்திக்கு இல்லைப்
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப.      (28)

ஆ. மொ.

இல.

The lady-love has not the habit of making expressions about her ardent love in the presence of her lover if we examine the love code. On trying to find out the same by the help of other people, it will be known as clearly as water in the new pot.

இளம்.

இது தலைவிக்கு உரியதோர் இயல்புணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : தலைவி தனது வேட்கையைக் கிழவன் முன்பு சொல்லுதல் நினைக்குங் காலத்துக் கிழத்திக்கு இல்லை. அங்ஙனம் சொல்லாதவிடத்தும் புதுக்கலத்தின்கட் பெய்த நீர் போலப் புறம்பொசிந்து காட்டும் உணர்வினையுமுடைத்து அவ்வேட்கை என்றவாறு.

எனவே, குறிப்பின் உணரநிற்கும் என்றவாறு. தலைவன் மாட்டுக் கூற்றினானும் நிகழப்படுமென்று கொள்ளப்படும்.

நச்.

இது தலைவிக்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்) : பிறநீர் மாக்களின்-வேறு வேறாகத் தம்மில் தாம் காதல்செய்து ஒழுகும் அறிவில்லாதாரைப் போல, கிழவன் அறியத் தன்னுறு வேட்கை முற்கிளத்தல் கிழத்திக்கு இல்லை-தலைவன் அறியும்படியாகத் தனக்குற்ற வேட்கையை அவன் முன்னர்க் கூறுதல் தலைவிக்கு இல்லை, ஆயிடை-அங்ஙனங் கூற்றில்லாதவிடத்து, எண்ணுங்காலையும்-அவள் வேட்கையை அவன் ஆராயுங்காலையும், பெய்நீர் போலும் உணர்விற்று என்ப-அவ்வேட்கை புதுக்கலத்துப் பெய்த நீர் புறத்துப்