பக்கம் எண் :

430தொல்காப்பியம்-உரைவளம்

‘கிழத்திக்கில்லை’ எனவே தோழிக்குத் தலைவி தனது வேட்கையை எதிர்நின்று கூறுதலுளதென்பது பெற்றாம். தலைவிக்குக் குறிப்பானன்றித் தலைவன் முன்னின்று கூறும் வேட்கைக் கூற்றின்மை முற்கூறிய செய்யுட்களுட் காண்க. எனவே தோழி முன்னர்த் தலைவிக்கு வேட்கைக்கூற்று நிகழ்தல் பெற்றாம்.

(உ-ம்)

“சேணோன் மாட்டிய நறும்புகை”      (குறுந்-150)

“ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த”      (அகம்-8)

என்பனவும்,

“இவளே, நின் சொற் கொண்ட”

என்றாற்போல் வருவனவும் முன்னர்க் காட்டினாம்.

“கடும்புனன் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்த மண்ணுநீர் போல
நடுங்கஞர் தீர முயங்கி நெருந
லாக மடைதந் தோளே”1      (அகம்-62)

என்றாற் போல்வன தலைவி வேட்கையைத் தலைவன் குறிப்பான் உணர்ந்தன.

வெள்.

இது தலைவிக் குரியதோர் இலக்கணம் கூறுகின்றது.

(இ-ள்) : வேறு வேறாகக் காதல் செய்தொழுகும் அறிவில் லாதாரைப் போன்று பலர்க்கும் புலனாகத் தனது மிக்க வேட்கையைத் தலைவன் முன்னர்ச் சொல்லும் சொல் நினைக்குங் காலத்துத் தலைவியிடத்து நிகழ்தல் இல்லை. அவ்விடத்துத்


1. கருத்து: நேற்று வேகமாக ஓடும் நீர்மிக்க காவிரியாகிய பெரிய யாற்றில் நீண்டசுழியுடைய வெள்ளத்தில் மூழ்குபவள்போல நடுங்கும் துயர் ஏற்க நாம் காக்கச் சென்ற போது, நமது நல்ல ஆகத்தை அடைந்து முயங்கினாள்.