பக்கம் எண் :

434தொல்காப்பியம்-உரைவளம்

தலைவி குறியிடம் கூறக் காரணம்

118. அவன்வரம்பு இறத்தல் அறம்தனக்கு இன்மையின்
களஞ்சுட்டுக் கிளவி கிழவியது ஆகும்
 தான்செலற்கு உரிய வழிஆக லான      (30)

ஆ. மொ.

இல.

As it is not proper on her part to disobey his word of command, she is bound to fix the meeting place (when he is desirous of meeting her) as she knows the place suitable for such meeting.

இளம்.

இது, சொல்லப்பட்ட கூட்டத்திற்குக் குறியிடம் கூறுவா னுணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : தலைவன் இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த பின்பு தலைவனெல்லையை இறத்தல் தலைவிக்கு அறமாகலின்மையானே குறியிடம் கூறுதல் தலைமகளதாம். அது தான் சேறற்குரிய இடமாதலான் என்றவாறு.

எனவே, இத்துணைக் கூறின் மிகையன்று என்றவாறாம்.

நச்.

இது முன்னர்க் களனும் பொழுதும் என்றவற்றுட் களங் கூறுதற்கும் உரியாள் தலைவி யென்கின்றது.

(இ-ள்) : அவன் வரம்பு இறத்தல்-தலைவன் கூறிய கூற்றின் எல்லையைக் கடத்தல், தனக்கு அறமின்மையின்-தலைவிக்கு உரித்தெனக் கூறிய தருமநூலின்மையின், களஞ்சுட்டுக் கிளவி கிழவியது ஆகும்-தலைமகனை இன்னவிடத்து வருகவென்று ஓரிடத்தைத் தான் கருதிக் கூறுங் கூற்று அவன் குறிப்புவழி ஒழுகுந் தலைவியதாம், தான் செலற்கு உரியவழி ஆகலான-தான் சென்று கூடுதற்குரிய இடந்தானே உணர்வள் ஆதலான் என்றவாறு.

‘சுட்டுக்கிளவி’ என்றதன் கருத்துத் தலைவன் இருவகைக் குறியும் வேண்டியவழி அவனை மறாது தான் அறிந்த விடத்