இளம். இது, தோழியிற் கூட்டத்திற்காயதோர் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : மேல் ‘காமக் கூட்டந் தனிமையிற் பொலிதலிற்றாமே தூதுவ ராகலும் உரித்’தெனக் கூறிப் போந்தார். அவ்வாறன்றி மேற் சொல்லப்பட்ட இயற்கைப்புணர்ச்சியாவது தோழியின் முடியுமிடத்து ஓரிடத்து உண்டு என்றவாறு. * “அன்பொடு புணர்ந்த வைந்திணை” (இறையனார்-களவியல்-1) என்றதனால் யாண்டும் உள்ளப் புணர்ச்சியான் வேட்கை மீதூர்ந்த வழியே தோழியின் முடியப் பெறுவது என்று கொள்க. அல்லாக்காற் பெருந்திணைப்பாற்படும். நச். இது தோழிக்குங் களஞ்சுட்டுக் கிளவி உரித்தென்று எய்தாதது எய்துவித்தது. (இ-ள்) : களஞ்சுட்டுக் கிளவி தலைவி குறிப்பால் தோழி கூறுதலன்றித் தானேயுங் கூறப்பெறும் ஒரோவழி என்றவாறு. தோழி குறித்த இடமுந் தலைவிதான் சேறற்குரிய இடமாமென்பது கருத்து. (உ-ம்) “செவ்வீ ஞாழற் கருங்கோட் டிருஞ்சினைத் தனிப்பார்ப் புள்ளிய தண்பறை நாரை மணிப்பூ நெய்தன் மாக்கழி நிவப்ப வினிப்புலம் பின்றே கானலு நளிகடற் றிரைச்சுர முழந்த திண்டிமில் விளக்கிற் பன்மீன் கூட்ட மென்னையர்க் காட்டிய வெந்தையுஞ் செல்லுமா ரிரவே யந்தி லணங்குடைப் பனித்துறை கைதொழு தேத்தி யாயு மாயமோ டயரு நீயுந்
* இச் சூத்திரத்துக்கு நச். உரையே சிறக்கும். |