தேம்பா யோதி திருநுத னீவிக் கோங்குமுகைத் தன்ன குவிமுலை யாகத் தின்றுயில மர்ந்தனை யாயின் வண்டுபட விரிந்த செருந்தி வெண்மணன் முடுக்கர்ப் பூவேய் புன்னையந் தண்பொழில் வாவே தெய்ய மணந்தனை செலற்கே” 1 (அகம்-240) எனத் தோழி களஞ்சுட்டியவாறும் காண்க. தோழியின் துணை 120. | முந்நாள் அல்லது துணையின்று கழியாது | | அந்நாள் அகத்தும் அதுவரைவு இன்றே (32) |
ஆ. மொ. இல. Except three days of menses there will be no day without their meeting; even during these three days it is not forbidden to the have meeting. இளம். இது பாங்கற் கூட்டம் நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : மேல், தோழியிற் கூட்டத்தின் விகற்பங் கூறினாராகலின், ஈண்டுத் துணை யென்றது பாங்கன் ஆயிற்று. மூன்று நாளல்லது துணையின்றிக் களவிற் புணர்ச்சி செல்லாது. அந் நாளகத்தும் துணையை நீக்கவும்படாது என்றவாறு.*
1. கருத்து: தலைவ! சுரபுன்னைக் கிளையில் உள்ள தன் குஞ்சை நினைத்து நாரைப்புள் நெய்தற் கழியிடத்தை விட்டுப் பரந்தது. அதனால் கடற்கரைப் பகுதியும் தனிமையுற்றது. எம் தந்தையரும் தாம் விளக்குக் கொண்டு பிடித்து வந்த மீன்களை எம் தமையன்மார்க்குக் காட்ட வீடு சென்றனர். எம் தாயும் தோழியர் கூட்டத்துடன் கடல்தெய்வத்தை வணங்கி விழவயர்வள் அதனால் நீ இவள் ஆகத்துத் துயிலுதலை விரும்புவாயாயின் நாளைப் பகலில் புன்னைப் பொழிலிடத்து வருக. கூடிச் செல்லலாம். * பாங்கற்கு உணர்த்துவது இயற்கைப் புணர்ச்சி நிகழாது இடையீடு பட்ட காலத்தாம். |