பக்கம் எண் :

438தொல்காப்பியம்-உரைவளம்

எனவே எதிர்ப்பட்ட தலைவன் இயற்கைப் புணர்ச்சி புணர் வதன் முன் பாங்கற்கு உணர்த்தவும் பெறும் என்றவாறு.

உதாரணம் மேற்காட்டப்பட்டது.

நச்.

இதுவும் அதிகாரத்தால் தலைவிக் கெய்தியதோர் இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்) : முந்நாள் அல்லது துணையின்று கழியாது-பூப் பெய்திய மூன்றுநாளும் அல்லது கூட்டமின்றி இக்களவொழுக்கங்கழியாது, அந்நாளகத்தும் அது வரைவு இன்றே-அம் மூன்று நாளின் அகப்பட்ட நாளாகிய ஒரு நாளினும் இரண்டு நாளினுந் துணையின்றிக் கழிதல் நீக்கப்படாது என்றவாறு.

‘அது’ என்றது, துணையின்றிக் கழிதலை. பூப்பினால் துணையின்றிக் கழிதல் பொருந்திற்றாயினும் பூப்பின்றி ஒரு நாளும் இரண்டு நாளுந் துணையின்றிக் கழிதல் வழுவாமெனக் கருதின் அதுவும் புறத்தார்க்குப் புலனாம் என்று அஞ்சுதலாற் கழிதலின் வழுவாகா வென்றற்கு ‘வரைவின்று’ என்றார். இன்னோரன்ன காரணந் தலைவற்கின்மையின் அவனால் துணையின்றிக் கழிவது இன்றாயிற்று.

(உ-ம்)

“குக்கூ வென்றது கோழி யதனெதிர்
துட்கென் றற்றென றூஉ நெஞ்சந்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே” 1      (குறுந்-157)

இது, முந்நாளைப் பிரிவாகிய பூப்பிடைப் பிரிவு வந்துழித் தலைவி கூறியது.

இனி அல்லகுறிப்பட்டுழி ஒருநாளும் இரண்டுநாளும் இடையீடா மென்றுணர்க. பூப்பு நிகழாத காலத்துக் கள


1. கருத்து: கோழி குக்கூ எனக் கூவியது. கேட்ட என் நெஞ்சம் துணுக்குற்றது. ஏன் எனின் காதலனை உடன் துயிலினின்றும் பிரிக்கக்கூடிய வாள்போல் வைகறைப் பொழுது வந்து விட்டதே என நெஞ்சம் எண்ணியதால் ஆம்.