3. வெள்ளை வாரணனார், “இயற்கைப்புணர்ச்சி, இடந் தலைப்பாடு, பாங்கற் கூட்டம் என்னும் மூன்றுநாளில் அல்லது பிற நாள்களில் தோழியின் துணையின்றிக் களவுநிகழ்ச்சி நிகழாது. அம் மூன்று நாள்களுக்குள் தோழியின் துணை பெறி னும் நீக்குதற்கில்லை” என்றார். இவ்வுரையே யேற்புடையதாகும். துணைச்சுட்டுக் கிளவி 121. | பன்னூறு வகையினும் தன்வயின் வரூஉம் | | நன்னய மருங்கின் நாட்டம் வேண்டலின் துணைச்சுட்டுக் கிளவி கிழவியது ஆகும் துணையோர் கருமம் ஆத லான. (33) |
ஆ. மொ. இல. As it is the duty of the companions to make their union a success and as they are in the habit of examining in hundred ways her behaviour in love affairs, the lady love is bound to speak her mind out, when they suspect her of having a lover. இளம். இது தலைவிக்கு உரியதோ ரியல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : பன்னூறு வகையினும் என்பது-பலவகையானும் என்றவாறு. நூறு, பத்து, ஆயிரம் என்பன பல்பொருட்பெயர்.1 தன்வயின் வரூஉ.....மாதலான என்பது-தன்னிடத்து வரும் நல்ல நயப்பாட்டுப் பக்கத்தினை ஆராய்தல் தலைவன் மாட்டு வேண்டுமாதலால், துணையைச் சுட்டிக் கூறலுறும் சொல்
1. பத்து, நூறு, ஆயிரம் எண்ணுப் பெயர்களாயினும் அவை பல்பொருள்களை யுணர்த்தும் பெயர்களாகவும் வரும். இங்கு நூறு என்பது அவ்வாறு பல்பொருட் பெயராக வந்தது. |