பக்கம் எண் :

442தொல்காப்பியம்-உரைவளம்

தலைமகளதாகும். தான் கூறும் கருமம் துணையோராற் செய்யப்படும் கருமமாதலான் என்றவாறு.

எனவே1தலைமகன் களவுக் காலத்துப் பாங்கற்கு உற்ற துரைத்த பின்பு பாங்கனைச் சுட்டி யாது செய்வாமெனக் கூறப் பெறும் என்றவாறாயிற்று.

நச்.

இது தலைவிக்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்) : தன் வயின் வரூஉம் நன்னய மருங்கின்-தலைவியிடத்தே தோழிக்குஞ் செவிலிக்கும் வருகின்ற அன்பு மிகுதிக்கண்ணே, பல் நூறு வகையினும் நாட்டம் வேண்டலில்-பல நூறாகிய பகுதியானும் ஆக்கமுங் கேடும் ஆராய்தலை அவர் விரும்புதலாலே, துணைச் சுட்டுக் கிளவி கிழவியதாகும்-இவள் ஓர் துணையுடையளென அவர் சுட்டுதலிடத்துக்’ 2 கிளக்குங் கிளவி தலைவியதாம், துணையோர் கருமம் ஆகலான-அக்கிளவி அத்தோழியானுஞ் செவிலியானும் முடியும் காரியம் ஆதலான் என்றவாறு.

என்றது, தோழி ‘பல்வேறு கவர் பொருணாட்டம்’ (114) உற்ற வழியுஞ் செவிலி களவு அலராதல் முதலியவற்றான் (115) நாட்டமுற்ற வழியுந் தலைவி அறத்தொடுநிற்குமென்று அறத்தொடுநிலைக்கு இலக்கணங் கூறியவாறாயிற்று. தோழிக்குத் தலைவி அறத்தொடு நிற்ப, அவள் செவிலிக்கு அறத்தொடுநிற்ப, அவள் நற்றாய்க்கு அறத்தொடுநிற்கு மென்று உணர்க. இதனானே பாங்கற்கு உற்றதுரைத்த பின்னர்த் தலைவன் உரையாமையும் பெற்றாம்3

‘புனையிழை நோக்கியும்’

என்னும் மருதக்கலி (76)யுள்

‘வினவுதியாயின்’


1. எனவே-தலைவிக்கு இவ்வாறு கூறவே.

2. சுட்டுதலிடத்து-கருதுதலிடத்து (கருதும்படி)

3. தலைவன் பாங்கற்கு உற்றது உரைத்த பின்னர்ப் பாங்கன் அவன் துயர்களை தற்கருமம் உடையனாதலின் மேலும் தலைவன் உரைத்தல் இல்லை.