என நாட்டம் நிகழ்ந்தவாறும், அதன் சுரிதகத்துக் கூட்ட முண்மை கூறுதலின் துணைச் சுட்டுக் கிளவி கிழவியதாயவாறுங் காண்க. ‘கொடியவுங் கோட்டவும், (கலி-54) என்பதன் சுரிதகத்துச் செவிலிக்கு உரையாயெனக் கூறியவாறுங் காண்க. வெள். இது களவொழுக்கத்துக்குரிய துணையினைச் சுட்டுதல் தலைவியின் கடமை என்பது கூறுகின்றது. (இ-ள்) : பல நூறு வகையாலும் தலைமகள்பால் உளவாகும் நன்மைப் பகுதியாகிய விரும்பத்தக்க சூழ்நிலைகளை ஊன்றி நோக்கும் உணர்வு தலைவனுக்கு வேண்டுமாதலானும் தாங்கள் இருவரும் மேற்கொண்ட அன்பின் வழிப்பட்ட களவொழுக்கம் ஒன்றிய அன்புடைய துணையாகிய தோழியால் புறத்தார் அறியாது தொடர்ந்து நிகழ்தல் வேண்டுமாதலானும், தனக்குத் துணையாவாள் இவள் எனத் தன் ஆருயிர்த் தோழியைத் தலைவனுக்குச் சுட்டிக் கூறுஞ் சொல் தலைவிக்கு உரியதாகும், எ-று. தலைமகளுக்கு நன்மைகள் உளவாதற்குரிய திறங்கள் எல்லாவற்றையும் எஞ்சாமல் தொகுத்துக் கூறும் முறையிற் ‘பன்னூறு வகையினும்’ என்றார். நாட்டம்-ஊன்றி நோக்கும் உணர்வு. துணையோர் கருமம்-உள்ளம் ஒன்றிய நண்புடைய துணைவரால் நிறைவேற்றுதற்குரிய செயல். ‘நாட்டம் வேண்டலின்’ என்புழி ‘இன்’னும், ‘துணையோர் கருமம் ஆகலான்’ என்புழி ‘ஆனு’ம் ஏதுப் பொருளில் வந்தன. சிவ. இச்சூத்திரம் தன் உயிர்த்தோழி இவள் எனத் தலைவி தோழியைச் சுட்டுமாறு கூறுகின்றது. (இ-ள்) : தோழி தலைவி மாட்டு நிகழும் நல்ல நயமான மாற்றங்களை பல வகையிலும் அவ்வப்போது ஆய்ந்து நாடுதல் வேண்டுமாதலாலும், அவ்வாறு நாடி அவளுக்கு உரியன செய்தல் துணையாவார் செயல் ஆதலினாலும் தலைவயிானவள் இடந்தலைப் பாட்டின் பின்னரோ பாங்கற் கூட்டத்தின் பின்னரோ தலைவனிடம் ‘தனக்கு உயிர்த்துணை இவளே’ |