பக்கம் எண் :

களவியல் சூ. 34 445

தாய் என்பாள் செவிலி

122. ஆய்பெரும் சிறப்பின் அருமறை கிளத்தலின்
 தாய்எனப் படுவாள் செவிலி ஆகும்.      (34)

ஆ. மொ.

இல.

As the great secret is revealed to the foster-mother, she is said to be the mother.

இளம்.

இது செவிலிக்கு உரியதோர் சிறப்பு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : நல்ல பெரிய சிறப்பினையுடைய அறிதற்கரிய மறைப்பொருள் யாவற்றையுங் கூறும் கடப்பாடுடையளாதலின்1 தாய் எனப்படுவாள் செவிலியாகும் என்றவாறு.

நற்றாய் இத்துணைச் சிறப்பிலள் என்றவாறு. இதனாற் பயன் களவுக் காலத்தையச்சொ... ... ... செவிலித் தாய்க்குங் கைத்தாய்க்கும் பொதுவாயினும் தாயென்று வேண்டப்படுவாள் செவிலி என்றறிவித்தல்.

நச்.

இது முற்கூறிய செவிலி சிறப்புக் கூறுகின்றது.

(இ-ள்) : ஆய்பெருஞ் சிறப்பின்-தாய்த்தாய்க் கொண்டு2 உயிர் ஒன்றாய் வருகின்றாளென்று ஆராய்ந்து துணியப்பட்ட பெருஞ் சிறப்புக் காரணமாக, அருமறை கிளத்தலின்-கூறுதற்கரிய மறைப் பொருளெல்லாங் குறிப்பானன்றிக் கூற்றாற் கூறத்தக்காளாதலின், தாயெனப்படுவோள் செவிலி ஆகும்-தாயென்று சிறப்பித்துச் சொல்லப்படுவாள் செவிலியேயாம் என்றவாறு.


1. கூறும் கடப்பாட்டுக்குரிமை யுடையளாதலின் என்பது பொருள்.

2. தாய்த் தாய்க் கொண்டு உயிர்ஒன்றாய் வருதல் என்பது தாய்க்கு (பாட்டிக்கு)த் தன் தோழியின் தாய் உயிர்த் தோழியாகவும் தன் தாய்க்குத் (தோழியின் தாய்) உயிர்த் தோழியாகவும் இப்படித் தாயார் வழிவழியாக உயிர் ஒன்றாய் வருதல்.