எனவே, ஈன்ற தாயினுங் களவின்கட் சிறந்தாள் இவளென்றார். கற்பிற்கு இருவரும் ஒப்பாராயிற்று. செவிலி சிறந்தமை சான்றோர் செய்யுளுட் பலருங் கூறியவாறு காண்க. வெள். இது களவொழுக்கத்தில் தாய் எனக் குறிக்கப்படுபவள் செவிலியே என்கின்றது. (இ-ள்) : ஆராய்தற்குரிய பெருஞ் சிறப்பினையுடைய அருமை வாய்ந்ததாய் உலகத்தார் அறியாது மறைவில் நிகழும் அன்புரிமை ஒழுகலாற்றினைக் கூறுதற்குரிமையுடையவளாதலின் (தலைவி தோழி என்னும் இருவராலும்) தாய் எனச் சிறப்பாகக் கூறப்படுபவள் செவிலித்தாய் ஆவாள், எ-று. அறிவால் நிரம்பிய சான்றோர்களால் ஆராய்ந்து துணிதற்குரிய பெருஞ் சிறப்புடையதாய் ஒத்த அன்பினராகிய ஒருவன் ஒருத்தி என்னும் இருவரிடையே மறைவில் நிகழும் கேண்மை என்பார் ‘ஆய் பெருஞ் சிறப்பின் அருமறை’ என்றார். மறைந்த ஒழுக்கமாகிய இதனை உய்த்துணர்ந்து தோழியை வினவிக் கேட்டற்கும் அவ் வருமறையை நற்றாய்க்குக் கூறுதற்கும் உரிய பழங்கேண்மையுடையாள் செவிலி என்பார், ‘அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி’ என்றார். ‘கிளத்தல்’ என்றது தோழியாற் செவிலிக்குக் கிளக்கப்படுதலையும் நற்றாய்க்குச் செவிலி கினத்தலையும் பொதுப்படச் சுட்டி நின்றது. செவிலி மகள் தோழி 123. | தோழி தானே செவிலி மகளே (35) |
ஆ. மொ. இல. The maid-friend is the daughter of the foster-mother. இளம். இது தோழிக்குரியதொரு சிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : களவுக் காலத்தும் இன்றியமையாளாகத் தலைவியால் வேண்டப்பட்டாள்1 செவிலி மகள் என்றவாறு.
1. வேண்டப்பட்டாள்-விரும்பப் பட்டவளாகிய தோழி. |