எனவே, பயின்றாரெல்லாருந் தோழியராகார். அருமறை கிளக்கப்படுதலான் உடன் முலையுண்டு வளர்ந்த செவிலி மகளே தோழி எனப்படுவாள் என்றவாறு. அருமறை கிளத்தல் என்பதனை யீண்டு வருவிக்க. நச். இது தோழியது சிறப்புணர்த்துகின்றது. (இ-ள்) : தோழி தானே-தோழியர் பலருள்ளும் ஒருத்தியெனப் பிரிக்கப்படுவாள். செவிலி மகளே-முற்கூறிய செவிலியுடைய மகள் என்றவாறு. இதற்கும் அருமறை கிளத்தல் அதிகாரத்தாற் கொள்க. தாய்த்தாய்க் கொண்டு வருகின்றமையின் (நாலடி-15) உழுவலன்பு போல்வதோர் அன்பு உடையர் இருவருமென்று கொள்க. இதனானே களவிற்குத் தோழியே சிறந்தாளாயிற்று. அது சான்றோர் செய்யுளுட் காண்க. வெள். இது தோழியாவாள் இவள் என்கின்றது. (இ-ள்) : தலைமகளது உணர்வுடன் ஒன்றிய உணர்வினளாகிய தோழியாவாள் செலிலியின் மகள், எ-று. ‘தோழி தானே’ என்புழி ஏகாரம் ‘ஒன்றித் தோன்றும் தோழி’ என அகத்திணையியலிலும் சிறப்பித்துரைக்கப்பட்ட தோழியைத் தனித்து வாங்கிக் கூறுதலின் பிரிநிலையேகாரம்* தோழி இயல்பு 124. | சூழ்தலும் உசாத்துணை நிலைமையிற் பொலிமே (36) |
ஆ. மொ. இல. Deliberation regarding the secret love among the faithful companions may extend.
* செவிலி மகளே என்புழி ஏகாரம் தோழியர் பலருள் பொதுப்படத் தோழி எனப்படுவாள் செவிலி மகளே மற்றையோர் மகளிர் அல்லர் எனப்படுதலின் பிரிநிலையேகாரம் என்று கொள்வது சிறக்கும். சிவ. |