சிவ. இச் சூத்திரம் குறிப்பறிதற் கருவி கூறுகின்றது. (இ-ள்) : தலைவன் தலைவியரின் இரண்டு கண்களும், ஒருவர் அறிவை (உணர்வை) ஒருவர் அறிவொடு ஒருப்படுத்தற்குத் தத்தம் வேட்கையொடு காம உணர்வினைக் கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும். அறிவை உடம்படுத்தலாவது இருவர் உணர்வும் ஒன்றாமாறு செய்தல். வேட்கையைக் கூட்டியுரைத்தலாவது காம வேட்கையைப் புலப்படுத்துதல். நாட்டம் இரண்டும் என்பதை இரண்டு நாட்டமும் எனக் கூட்டுக. குறிப்புரைக்குக் கருவியாகிய நாட்டத்தைக் குறிப்புரையென்றார். குறிப்புரை குறிப்பு மொழி. மொழியாவது தனக்குள்ளே கூறிக் கொள்வது. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்”. (குறள். 1093) இது தலைவன் தன்னுட் கூறியது. இப்படித் தன்னுட் கூறிக் கொள்வதை-தலைவன் வேட்கையை அவன் கண்கள் தலைவிக்குத் தெரிவிக்கும். குறிப்பறிந்த வழி நிகழ்வன 94. | குறிப்பே குறித்தது கொள்ளு மாயின் | | ஆங்கவை நிகழும் என் மனார் புலவர் (6) |
ஆ. மொ. இல. If their look reciprocal, singns of love-making will take place, so say the poets. இளம். என்-எனின், மேலதற்கோர் புறனடையுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : ஒருவர் குறிப்பு ஒருவர் குறித்ததனைக் கொள்ளுமாயின், அவ்விடத்துக் கண்ணினான் வருங் குறிப்புரை நிகழும் என்றவாறு, |