இது கூட்ட முணராதாள்போல நாணிற்கு மாறாகாமற் கூறலின் முன்னுறவுணர்தல். “நின்னின் விடாஅ நிழற்போற் றிரிதருவா யென்னீ பெறாத திதென்”1 (கலி-61) இது குறையுறவுணர்தல். “ஏனல் காவலிவளு மல்லள்” (பக்-485) என்பது அவன் வரவுணர்தல். வெள். இது பாங்கிமதியுடம்பாடு முத்திறப்பட்டு நிகழும் என்கின்றது. (இ-ள்) : தலைவன் தன்பால் வந்து இரந்து குறையுற்று நிற்றலால் அவனது உள்ளக் கருத்தினையுணர்தலும், தலைவியின் உள்ளக் குறிப்பினைக் கண்டுணர்தலும், தலைவியும் தானும் ஒருங்கிருந்த நிலையில் வர அந்நிலையில் அவ்விருவரது உள்ளக் கருத்தினையுணர்தலும் எனத் தோழி, தன் கருத்துடன் அவ்விருவரது கருத்தினையும் வைத்து ஒன்றுபடுத்து உணரும் உணர்ச்சி மூவகைப்படும் என்பர் ஆசிரியர், எ-று. பாங்கி மதியுடம்பாடாவது தலைவன் தலைவி என்னும் காதலர் இருவரது அறிவினையும் தோழி தன்னறிவினால் ஒருங்கு வைத்து ஆராய்ந்து அவ்விருவரிடையே நெருங்கிய தொடர்புண்மை துணிதல். குறையுறவுணர்தல் என்பது தலைவன் தோழியின்பால் குறையிரந்து நின்ற நிலையில் ‘இவன் என்னை இரந்து பின் நிற்கின்றது எது கருதியோ’ என ஆராய்ந்துணர்தல். முன்னுறவுணர்தல் என்பது இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த பின்னர்த் தலைமகளது வேறுபாடு கண்ட தோழி ‘இவளது மேனி வேறுபாடு தெய்வத்தாலாயிற்றோ பிறிதொருவாற்றான் ஆயிற்றோ என ஐயுற்றுக் குறிப்பினால் உணர்தல். இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல் என்பது, மேற்குறித்த ஐயவுணர்வுகளோடு நின்ற தோழி தானும் தலைவியு
1. கருத்து: நின்னிற் பிரியா நின் நிழல்போல் இங்குத் திரிந்து கொண்டிருப்பவனே! நீ பெறாதது என்ன இது? |