பக்கம் எண் :

454தொல்காப்பியம்-உரைவளம்

மாகிய இருவரும் உடனிருந்த நிலைமைக்கண் தலைவன் அங்கு வந்து தோழியை நோக்கி ஊரும் பெயரும் பிறவும் வினவி நின்றானாக, அந் நிலையில் அவ்விருவர் குறிப்பும் உணர்ந்து தலைவியொடு தலைவனிடை முன்னேயுள்ள தொடர்பினையுணர்ந்து துணிதல். தொல்காப்பியனார், தோழிக்குரியவாகச் சுட்டிய இம் மூவகையுணர்வுகளையும்,

முன்னுற வுணர்தல் குறையுற வுணர்தல்
இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல்என்று.
அம்மூன் றென்ப தோழிக் குணர்ச்சி      (கள-7)

எனவரும் நூற்பாவில் இறையனார் களவியலாசிரியர் எடுத்தாண்டுள்ளமை இங்கு ஒப்புநோக்கியுணரத்தகுவதாகும்.

இங்ஙனம் பாங்கி தன் அறிவினுடன் தலைவன் தலைவி என்னும் இருவர் அறிவினையும் ஒன்றுபடுத்து உணர்தலின் மதியுடம்படுத்தல் என்று பெயராயிற்று. மதி-அறிவு. உடம்படுத்தல்-ஒன்றுபடுத்தியுணர்தல்.

126. அன்ன வகையான் உணர்ந்தபின் அல்லது
 பின்னிலை முயற்சி பெறாளென மொழிப,      (38)

ஆ. மொ,

இல.

Unless it is known by such methods, he (lover) will not proceed further (in his love-affairs).

இளம்.

இதுவும் தோழிக்கு உரியதோர் திறன் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : மேற்சொல்லப்பட்ட கூறுபாட்டான் இருவர் மாட்டும் அன்புடைமை உணர்ந்தபின் அல்லது வழிபாட்டு நிலைமையாற் கூட்டத்திற்கு முயலப்பெறாள் தோழி என்றவாறு.

அஃதேல், உள்ளப் புணர்ச்சியானின்று மெய்யுறாது கூட்டத்திற்கு முயல்வார் உளர். ஆயின், அஃதெற்றாற் பெறுதும் எனின்