பக்கம் எண் :

களவியல் சூ. 38 455

ஆண்டும் இருவர் மாட்டுளதாகிய அன்புடைமையான் மன நிகழ்ச்சியுளவாக அந் நிகழ்ச்சி கண்டுழியும் முயலப் பெறுமென்று கொள்க. அதனானேயன்றே ‘முன்னுறவுணர்தல்’ என்னும் சூத்திரத்தானும் ‘புணர்ச்சியுடம்படுதல்’ என்னாது’ மதியுடம் படுதலொரு மூவகைய’ எனப் பொதுப்பட ஓதுவாராயிற்றென்க. அவ்வன்பினான் வருநிகழ்ச்சி யுள்வழியும் இவ்விட மூன்றினும் காதலுண்மை அறியலாகும்.

நச்.

இது மதியுடம்பட்ட பின்னல்லது தலைவன் கூற்று நிகழ்த்தப்பெறானென்கின்றது.

(இ-ள்) : அன்னவகையான் உணர்ந்தபின் அல்லது-அம்மூவகையானுந் தோழி மதியுடம்படுத்தபின்னல்லது பின்னிலை-இவன் ஓர் குறையுடையனென்று தோழி உய்த்துணர நின்றுமிடத்து, முயற்சி பெறான் என மொழிப-கூற்றான் அக்குறை முடித்தல் வேண்டுமென்று முடுக்குதல் பெறானென்று கூறுப ஆசிரியர் என்றவாறு.

தோழி தன்னை வழிப்பட்டவாறு கண்டு மதியுடம்பட்டவாறுணர்ந்து கூற்றான் உணர்த்தும்.

அது ‘நெருநலு முன்னாள்’ (பக். 490) என்பதனுள் ‘ஆரஞர் வருத்தங் களையாயோ’ என்றவாறு காண்க.

வெள்,

இதுவும் தோழிக்குரியதோர் திறம் உணர்த்துகின்றது.

(இ-ள்) : மேற்குறித்த மூவகையாலும் தலைவன் தலைவி என்னும் இருவர்பாலும் ஒத்த அன்புடைமையுணர்ந்தபின்னன்றித் தன்னை இரந்து பின் நிற்கும் தலைவனது முயற்சிக்குத் தோழி இடந்தர மாட்டாள், எ-று.

அகன்ஐந்திணை ஒழுகலாற்றின் இடம்பெறும் தோழியின் செறிவும் நிறையும் செம்மையும் அறிவும் அருமையுமாகிய பெண்மைப் பண்புகள் இந்நூற்பாவால் புலப்படுத்தப் பெற்றமை உணர்தற்குரியதாகும். இத் தொல்காப்பிய நூற்பாவின் கருத்தை அடியொற்றியமைந்தது.

முன்னுற வுணரினும் அவன் குறையுற்ற
பின்ன ரல்லது கிளவி தோன்றாது