127. | முயற்சிக் காலத்து அதற்பட நாடி | | புணர்த்தல் ஆற்றலும் அவள்வயின் ஆன. (39) |
ஆ. மொ. இல. During his attempt to have her, examining the possibility of the Union in the proper way, the maid is capable of making the lady-love to wish for the union. இளம். இதுவும் அது. (இ-ள்) : தோழி வழிமொழிந்து முயலுங் காலத்து அவன் நினைவின்கட் படுந்திறன் ஆராய்ந்து புணர்த்தலைச் செய்யும் அவளிடத்து என்றவாறு. அஃதாவது, ‘இன்னுழிச் செல்’ எனவும் ‘இன்னுழி வா’ எனவும் தலைவியை ஆயத்துணின்றும் பிரித்துத் தனி நிறுத்திப் பட்டாங்கு கூறியும் பிறவாற்றானும் ஆராய்ந்து கூட்டுதல். இவ்வைந்து சூத்திரத்தானுந் தோழிக்கு உரிய மரபு1 உணர்த்தியவாறு காண்க. நச். இது தலைவன் முயற்சி கூறிய முறையே தோழி முயற்சி பிறக்குமிடங் கூறுகின்றது. (இ-ள்) : முயற்சிக் காலத்து-தலைவன் அங்ஙனங் கூடுதற்கு முயற்சி நிகழ்த்துங் காலத்தே, நாடி அதற்படப் புணர்த்தலும்-தலைவி கூடுதற்கு முயலுங் கருத்தினை ஆராய்ந்து அக்கூட்டத்திடத்தே உள்ளம்படும்படி கூட்டுதலும், அவள் வயின் ஆன ஆற்றல்-தோழியிடத்து உண்டான கடைப்பிடி2 என்றவாறு.
1. மரபு-வழிவழி வரும் இலக்கணம். 2. கடைப்பிடி-கொள்கையாகக் (கடைப் பிடித்துக்கொண்டு செய்யும் செயல். அது ஆற்றலால் செயப்படுவது ஆதலின் அவ்வாற்றல் கடைப்பிடி எனப்பட்டது. |