ஆற்றல்-ஒன்றனை முடிவு போக்கல். உம்மை-எச்சவும்மை1 மதியுடம்படுத்தலேயன்றிக் கூட்டவும் பெறுமென்க. இருவகைக் குறியிடம் 128. | குறிஎனப் படுவது இரவினும் பகலினும் | | அறியக் கிளந்த ஆற்றது என்ப (40) |
ஆ. மொ. இல. The act of fixing the meeting place can be either at night or in day-they say. இளம். என்பது, மேல் ‘களஞ் சுட்டுக் கிளவி கிழவியதாகும்’ என்றார். அதற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : குறி என்று சொல்லப்படுவது இரவினானும் பகலினானும் இருவரும் அறியச் சொல்லப்பட்ட இடத்தையுடைத்து என்றவாறு. எனவே இரவிற் குறி, பகற்குறி என இருவகைப்படும் என்பது கொள்ளப்படும். நச். அங்ஙனங் கூட்டுகின்றவட்குக் கூடுதற்குரிய காலமும் இடனுங் கூறுகின்றது. (இ-ள்) : குறியெனப்படுவது-குறியென்று சொல்லப்படுவது, இரவினும் பகலினும்-இரவின்கண்ணும்பகலின்கண்ணும், அறியத் தோன்றும் ஆற்றது என்ப-தலைவனுந் தலைவியுந்தானும் அறியும்படி தோன்றும் நெறியையுடைய இடம் என்றவாறு.
1. எச்சவும்மை-இறந்தது தழீஇய எச்சவும்மை. அது ‘குறையுறவுணர்தல்’ முதலிய முன்னர்க் கூறிய மூன்றையும் தழுவுகிறது. |