‘நெறி’ என்றார் அவன் வகுதற்குரிய நெறி இடமென்றற்கு ‘அது’ என்று ஒருமையாற் கூறினார்.1 தலைப் பெய்வதோரிடமென்னும் பொதுமை பற்றி. இரவு களவிற்குச் சிறத்தலின் முற்கூறினார். “அறியத் தோன்றும்’ என்றதனாற் சென்று காட்டல் வேண்டா நின்று காட்டல் வேண்டுமெனக் கொள்க.2 இரவுக் குறியிடம் 129. | இரவுக் குறியே இல்லகத் துள்ளும் | | மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே மனையகம் புகாஅக் காலை யான (41) |
ஆ. மொ. இல. When it is not possible to enter into the home, the night-meeting place will be in the premises of the house at such distance as to hear the speech of the people in the house. இளம். என்றது இரவுக் குறிக்கு இடமுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : இரவுக் குறியாம் இடமே இல்லகத்துள் மனையகம் புகாவிடத்துக்கண்3 மனையோர் கிளவி கேட்கும் அணிமைத்தாம் என்றவாறு.4
1. படுவது என்று ஒருமையாற் கூறாமல் ‘படுவன’ எனப்பன்மையாற் கூறல் வேண்டும்; இரவுக்குறி பகற்குறி என இருவகைக் குறிகளையும் குறித்தலின். இரவுக்குறியிடம் பகற்குறியிடம் என இரு வகையில் இருந்தாலும் ‘இடம்’ என்பது பொதுச் சொல்லாக அமைதலின் அவ்வாறு ஒருமையிற் கூறினார். 2. அறியுமாறு தோன்றும் என்பதனால் அக்குறியிடம் இன்னது என்பதை அங்குச் சென்று காட்டுதல் வேண்டுவதில்லை. இருந்த இடத்திருந்தே காட்டுதல் வேண்டும் என்பது புலனாம். ‘அறியக் காட்டல்’ என்றால் சென்று காட்டல் எனக் கொள்ளலாம். 3. புகாஅக்காலையான: புகாக்கால் என்பது புகாவிடம் என்னும் பொருளது. கால்-இடம். கால் காலை என ஐசாரியை பெற்றது. 4. இல்லகம்-வீட்டின் எல்லையிடம். அதாவது தோட்டம். |